அமலாக்கத்துறை வழக்கில் நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி.. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த குறுக்கு விசாரணை
சென்னை: அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கின் விசாரணைக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆஜரானார். இதில், விசாரணைக்கு ஆஜராகியிருந்த தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

இதையடுத்து செந்தில்பாலாஜி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்க துறை தொடர்ந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு கடந்த 4 ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார் .
அமலாக்க துறை சாட்சியான மணிவண்ணனும் ஆஜராகியிருந்தார். விசாரணைக்கு ஆஜராகியிருந்த தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ம.கவுதமன் குறுக்கு விசாரணை நடத்தினார். அன்றைய தினம் குறுக்கு விசாரணை நிறைவடையவில்லை. இதையடுத்து, விசாரணையை வரும் 29ம் தேதிக்கு(இன்றைக்கு) நீதிபதி தள்ளிவைத்தார்.
அதன்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகியிருந்தார். விசாரணைக்கு ஆஜராகியிருந்த தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம் ஆஜரானார்.
அவரிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ம.கவுதமன் குறுக்கு விசாரணை நடத்தினார். குறுக்கு விசாரணை இன்றும் நிறைவடையததை அடுத்து விசாரணையை நவம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணன் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications