சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.. 5 இடங்களில் பரபரப்பு சிக்குவது யார்?
சென்னை: அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சென்னையில் 5 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். கோட்டூர்புரம், தி. நகர், அண்ணாநகர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாகவே அமலாக்கத்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அமைச்சர்கள், மணல் குவாரி உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலருக்கும் சம்மன் அனுப்பி விளக்கம் பெற்று வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை, புறநகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட இடங்களில் துணை ராணுவப்படையினர் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். திருவான்மியூரில் நவீன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணாநகர், கோட்டூர்புரம், தி.நகரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications