முடியவே முடியாது.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன செந்தில் பாலாஜி.. அமலாக்கத்துறை ஆடிய கேம்.. போச்சே
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் பிணை வழங்க கோரியும் செந்தில் பாலாஜி வழக்கு தொடுத்து இருந்தார். செந்தில் பாலாஜி தொடுத்த மனு மீதான விசாரணையை மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

கடந்த முறையும் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு வழக்கை ஒத்திவைக்க கூடாது.. அதற்கு அனுமதிக்கவே கூடாது என்று செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
எனினும் வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் மே 15ம் தேதி விசாரணை செய்யப்படும் என்று கூறினார். மேலும் அடுத்த முறை நிச்சயம் விசாரணை நடைபெறும் என உறுதி அளித்துள்ளனர்.
செந்தில் பாலாஜி வழக்கு: கடந்த மாதம் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு மற்றும் விசாரணை ரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு பதில் அளிக்க கூறி உத்தரவிட்டது. அதோடு வழக்கை இன்று ஒத்திவைத்தது.
செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப்படுதுகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் இன்றுதான் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ததால் செந்தில் பாலாஜி இப்படி குறிப்பிட்டார்.
இதில் இன்று அமலாக்கத்துறை தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அமலாக்கக்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் influential person-ஆக உள்ளார்; வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது., விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை, என்று கூறியது.,
இதற்கு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த பதிலில், 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன் ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது. எஎன்று செந்தில் பாலாஜி இதற்கு பதில் அளித்தார்.
இதையடுத்து அமலாக்கத்துறை அளித்த பதிலில்.. நாங்கள் இந்த வழக்கில் தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வேண்டும் என்றே நாங்கள் தாமதம் செய்யவில்லை, என்று அமலாக்கத்துறை கூறியது . தொடர்ந்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சிக்கல் மேல் சிக்கல்: மே 18ஆம் தேதியிலிருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் கோடை கோடை விடுமுறை விடப்படும். இதனால் மே 15 ஆம் தேதி நிவாரணம் கிடைக்க வேண்டும். அப்போது பெயில் கிடைக்கவில்லை என்றால் பிறகு ஒன்றரை மாதம் செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டி இருக்கும்.
வழக்கு பின்னணி; சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. .உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications