ரத்தீஷை பிடித்தால்.. திமுக முதல் குடும்பத்தை பிடிக்கலாம்.. அமலாக்கத்துறை பிளான்.. தாமோதரன் சீக்ரெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரத்தீஷை பிடித்தால் திமுக முதல் குடும்பத்தை பிடிக்கலாம் என்று அமலாக்கத்துறை நினைக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு உதயநிதி ஸ்டாலின் - ஸ்டாலின் முட்டாள்கள் இல்லை. ஒருவேளை முறைகேடு செய்திருந்தால் கூட.. செய்து இருக்கிறார்கள் வைத்துக்கொள்வோம்.. அப்படி செய்திருந்தால் கூட ஸ்டாலின் குடும்பம் வெளிப்படையாக இப்படி மாட்டும் அளவுக்கு செய்ய மாட்டார்கள், என்று ஒன்இந்தியாவிற்கு டாஸ்மாக் ரெய்டு தொடர்பாக பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஒன்இந்தியாவிற்கு டாஸ்மாக் ரெய்டு தொடர்பாக பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ், பல மாஜி அமைச்சர்கள் மீதும்தான் வழக்கு உள்ளது. அதை எல்லாம் அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை. ஆனால் திமுகவினரை குறி வைக்கிறது. விசாகன் வீடு குப்பை தொட்டியில் வாட்ஸ் ஆப் ஸ்கிரீன் ஷாட் இருப்பதாக எல்லாம் நாடாக நடத்துகிறார்கள். இதை எல்லாம் யார் செய்வார்கள். இதெல்லாம் முட்டாள்தனமாக இல்லையா? அமலாக்கத்துறை நாடகம் நடத்துகிறது.

TASMAC

ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிற்கு அமலாக்கத்துறை ஏன் செல்கிறது. சம்மன் அவருக்கு அனுப்பப்பட்டதா? அவரை எப்படி சம்பந்தமே இல்லாமல் நூல் பிடித்து செல்கிறார்கள். விசாகன் கூறினாரா? விசாகன் சொன்னாரா நான் டாஸ்மாக் பணத்தை அவரிடம் கொடுத்தேன் என்று? அவர் என்ன விஜயா? வருமான வரி கட்டாமல் ஏமாற்றுவதற்கு? அந்த வருமான வரி அழுத்தம் காரணமாகவே விஜய் அரசியல் கட்சியை தொடங்கினார்.

ஆகாஷ் பாஸ்கரன் மூலம் எப்படி உதயநிதி பிடிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ரத்தீஷை பிடித்தால் திமுக முதல் குடும்பத்தை பிடிக்கலாம் என்று அமலாக்கத்துறை நினைக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு உதயநிதி ஸ்டாலின் - ஸ்டாலின் முட்டாள்கள் இல்லை. ஒருவேளை முறைகேடு செய்திருந்தால் கூட.. செய்து இருக்கிறார்கள் வைத்துக்கொள்வோம்.. அப்படி செய்திருந்தால் கூட ஸ்டாலின் குடும்பம் வெளிப்படையாக இப்படி மாட்டும் அளவுக்கு செய்ய மாட்டார்கள்.

சிலர் சொல்வது போல ஸ்டாலின் அப்படி எல்லாம் செய்ய மாட்டார். அமலாக்கத்துறைக்கு இதில் சிக்கல்தான். ஆனாலும் முதல் குடும்பத்தை சேர்ந்தவர்களை கண்டிப்பாக அமலாக்கத்துறை கைது செய்யும், என்று ஒன்இந்தியாவிற்கு டாஸ்மாக் ரெய்டு தொடர்பாக பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் வழக்கு பின்னணி

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். கடந்த இரண்டு நாட்களாக அங்கே ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே டாஸ்மாக்கிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அதுகுறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையான சோதனையை எதிர்ப்பது குற்ற நீதி பரிபாலனத்தின் அஸ்திவாரத்தை பாதிக்கும். சோதனைக்கு அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்று கொள்ள முடியாது. கூட்டாட்சி தத்துவம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்றும் கூட்டாட்சி தத்துவத்தை மக்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டுமே தவிர தேசத்திற்கு எதிரான குற்றம் குறித்த விசாரணையை தடுக்க பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதிகளும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+