நம்பர் கேம்.. செந்தில் பாலாஜியை வைத்து கேம் ஆடும் அமலாக்கத்துறை.. உச்ச நீதிமன்றத்தில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இன்று அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்தது. ஆனால் இதற்காக அமலாக்கத்துறை எடுத்துக்கொண்ட நேரம்தான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு மற்றும் விசாரணை ரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு பதில் அளிக்க கூறி உத்தரவிட்டது. அதோடு வழக்கை இன்று ஒத்திவைத்தது.

Enforcement Directorate is playing a number game in SC against Senthil Balaji case

செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப்படுத்துகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் இன்றுதான் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ததால் செந்தில் பாலாஜி இப்படி குறிப்பிட்டார்.

இதில் இன்று அமலாக்கத்துறை தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அமலாக்கக்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் influential person-ஆக உள்ளார்; வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது., விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை, என்று கூறியது.,

இதற்கு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த பதிலில், 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன் ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது என்று செந்தில் பாலாஜி இதற்கு பதில் அளித்தார்.

இதையடுத்து அமலாக்கத்துறை அளித்த பதிலில்.. நாங்கள் இந்த வழக்கில் தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வேண்டும் என்றே நாங்கள் தாமதம் செய்யவில்லை, என்று அமலாக்கத்துறை கூறியது . தொடர்ந்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

நம்பர் கேம்: அமலாக்கத்துறை இத்தனை நாள் பதில் அளிக்காமல் இன்றுதான் பதில் அளித்ததால்.,. பதில் மனுவை நாங்கள் இன்னமும் படித்து பார்க்கவில்லை எனவே வழக்கின் விசாரணையை மே ஆறாம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதுதான் செந்தில் பாலாஜிக்கு எதிராகி உள்ளது.

மே 18ஆம் தேதியிலிருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை விடப்படும். இதனால் மே 6ஆம் தேதி நிவாரணம் கிடைக்க வேண்டும். அப்போது பெயில் கிடைக்கவில்லை என்றால் பிறகு ஒன்றரை மாதம் செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டி இருக்கும்.

வழக்கு பின்னணி; சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. .உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணைக்கு வந்தது.

விசாரணை: அப்போது செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு: முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை தாக்கல் செய்து இருந்தார். ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட் அவருக்கு எதிரான வழக்கு விசாரணையை, மூன்று மாதங்களில் முடிக்க முதன்மை சிறப்பு நீதிமன்றத்துக்கு, உத்தரவிட்டது. மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இருப்பினும், வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிப்பது தேவையற்றது என்று கூறிய சுப்ரீம் கோர்ட், இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை இன்று 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதில்தான் இன்று அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+