சிவகார்த்திகேயன், தனுஷ் மாட்டுவது இப்படித்தான்! உதயநிதி லிங்க்.. திருச்சி சூர்யா பற்ற வைத்த நெருப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருப்பு பணத்தில் சம்பளம் வாங்கி இருந்தால்.. சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோரும் மாட்டுவார்கள். பணம் எங்கே சென்றுள்ளது.. எந்தெந்த படங்களுக்கு சென்றுள்ளது.. யார் வாங்கி உள்ளனர்.. எப்படி பணம் பெற்றுள்ளனர் என்றெல்லாம் விசாரணை செய்வார்கள். அந்த சம்பத்தப்பட்ட பணம் அட்லீ, விக்னேஷ் சிவனுக்கு சென்று இருக்கிறதா என்றும் விசாரணை செய்வார்கள், என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை ரெய்டுகள் தொடர்பாக தொடர்பாக திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அமலாக்கத்துறையிடம் சில ஆதாரங்கள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள். உதயநிதியின் நட்பு வட்டம் கடும் சிக்கலில் உள்ளது. ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ், விக்ரம் ஜூஜூ ஆகியோர் எல்லாம் உதயநிதி ஸ்டாலினின் கருப்பு பண முதலைகள். இவர்கள் மாட்ட போகிறார்கள்.

Enforcement Directorate may go for Sivakarthikeyan Dhanush thorugh Udhayanidhi Stalin says Trichy Surya

உதயநிதி ஸ்டாலின் இப்போது குறி வைக்கப்பட காரணம் இவர்கள் மூலம்தான். இவர்களிடம் கறுப்பு பணம் உள்ளது என்றால் அந்த பணத்தை வைத்து சம்பளம் கொடுத்திருந்தால் அதை வாங்கிய சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோரும் மாட்டுவார்கள். பணம் எங்கே சென்றுள்ளது.. எந்தெந்த படங்களுக்கு சென்றுள்ளது.. யார் வாங்கி உள்ளனர்.. எப்படி பணம் பெற்றுள்ளனர் என்றெல்லாம் விசாரணை செய்வார்கள். அந்த சம்பத்தப்பட்ட பணம் அட்லீ, விக்னேஷ் சிவனுக்கு சென்று இருக்கிறதா என்றும் விசாரணை செய்வார்கள்.

யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். பணம் எங்கே சென்றுள்ளது என்று விசாரிப்பார்கள். உங்களிடம் உள்ள கருப்பு பணம் யாரிடம் எல்லாம் சென்றுள்ளது என்று விசாரணை செய்வார்கள். அமலாக்கத்துறை இறங்கி ரெய்டு செய்துள்ளனர். அடுத்து மேல் இடத்திற்கு செல்வார்கள். அதாவது இப்போது கிரவுண்டு ரிப்போர்ட்டை எடுத்துவிட்டனர். இதை வைத்து வழக்கை வலுவாக்குவார்கள். அடுத்து அமலாக்கத்துறை மேல் கட்ட தலைகளுக்கு குறி வைக்கும்.

திமுக பதறிக்கொண்டு டெல்லிக்கு செல்ல காரணம். இப்போது இருக்கும் போக்கிலேயே சென்றால்.. திமுக மீண்டும் வெல்லும். திமுக நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது. இதனால் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள். இதை மாற்றவே ஸ்டாலின் குடும்பத்தை கைது செய்ய.. பல அமைச்சர்களை கைது செய்ய.. எல்லா அமைச்சர்களையும் லாக் செய்ய கூட டெல்லி தயாராக இருக்கிறது. இதுதான் டெல்லியின் பிளான்.

செந்தில் பாலாஜி ஏற்கனவே சரண்டர் ஆகிவிட்டார். அவர் டெல்லியிடம் சரண்டர் ஆகிவிட்டார். இத்தனை காலம் ரத்தீஷ் பற்றி எல்லாம் யாருக்கும் தெரியாது. அவர்கள் பெயர் எல்லாம் எப்படி தெரிந்தது? அவர்கள் எல்லாம் ஏன் தலைமறைவாக வேண்டும்? இவர்களை எல்லாம் ரெய்டு விடுங்கள் என்று செந்தில் பாலாஜிதான் கூறி உள்ளார். அவர்கள் இத்தனை காலம் வெளியே தெரியாமல் இருந்தனர். இப்போது எப்படி வெளியே சிக்கி உள்ளனர். தமிழ்நாட்டில் அதிமுகவை கட்டுப்படுத்திவிட்டனர், அடுத்து திமுகவை அடித்து காலி செய்ய உள்ளனர் என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் வழக்கு

டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+