கைது! தலைமை செயலகத்தில் நுழைந்த அமலாக்கத்துறையால் வேல்முருகன் கோபம்! முதல்வர் ஸ்டாலினுக்கு ஐடியா
சென்னை: ‛அதிகாரம் என்னிடம் இருந்தால்..' எனக்கூறி தமிழக தலைமை செயலகத்தில் நுழைந்து சோதனை நடத்திய அமலாக்கத்துறையினரை கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், முதல்வர் ஸ்டாலினுக்கு ஐடியா கொடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது போக்குவரத்து கழகங்களில் பணி வாங்கி தருவதாக கூறி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணை தொடங்கினர்.
இந்நிலையில் தான் கடந்த 13ம் தேதி சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் கரூரில் உள்ள அவரது இல்லம் மற்றும் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகங்களில் நுழைந்தும் அமலாக்கத்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
இந்த ரெய்டை தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகு செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்னும் சில நாட்களில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கிடையே தான் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை என்பது பழிவாங்கும் செயலாக இருக்கிறது என திமுக மற்றும் அதன் தோழமை கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதோடு மட்டுமின்றி தலைமை செயலகத்தில் நுழைந்து அமலாக்கத்துறையினர் சோதனையிட்டு இருப்பதையும் கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்நிலையில் தான் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் அமலாக்கத்துறையினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛தலைமை செயலகத்தில் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது ஏன்? அதிகாரம் என்னிடம் இருந்தால் அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்திருப்பேன்'' என தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications