துரத்தும் ED! போட்டோவை காட்டி வீடு வீடாக தேடுதல் வேட்டை! செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில், அவருக்குச் சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாகப் புகார்கள் கிளம்பின. இந்த விவகாரத்தில் பலரும் புகார் அளித்த நிலையில், அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

இதற்கிடையே கடந்த மே மாதம் முதலில் வருமான வரித்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்தது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.
செந்தில் பாலாஜி: பல மணி நேரம் அந்த ரெய்டு தொடர்ந்த நிலையில், அன்று நள்ளிரவில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தனர். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய குழாயில் 4 இடங்களில் அடைப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். புழல் சிறையில் இருந்து அவரை சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த நிலையில், அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு பக்கம் அவர் ஜாமீன் கோரி தொடர்ந்து மனு தாக்கல் செய்து வருகிறார்.
மீண்டும் சோதனை: இதற்கிடையே இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் சுமார் 10 இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் போட்டோவை காட்டி அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றர். நூர் வீராசாமி தெருவில் புகைப்படத்தைக் காட்டி வீடு வீடாகச் சென்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அங்குள்ள ஜூஸ் கடைகள், சிறிய உணவகங்களுக்கும் சென்று மொபைலில் போட்டோவை காட்டி அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
வீடு வீடாகத் தேடும் அமலாக்கத் துறை: அதேநேரம் இந்த நபர் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், எந்த வழக்கில் இவரைத் தேடுகின்றனர் என்பது குறித்த தகவல்களையும் அமலாக்கத் துறை பகிரவில்லை. அந்த நபரின் போட்டோவை காட்டி, அவரை பார்த்துள்ளீர்களா.. அவர் எங்கே வசிக்கிறார் என்று மட்டும் கேட்டு வருகின்றனர்.
காலையில் இந்த சோதனை தொடங்கிய நிலையில், சுமார் 4 மணி நேரமாக ரெய்டு தொடர்ந்து வருகிறது. ஒரு பக்கம் மணல் குவாரிகள் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில், மறுபுறம் இங்கே வீடு வீடாகச் சென்று அமலாக்கத் துறையும் சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்த இரண்டும் இடையே தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications