சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. காலையிலேயே பரபரப்பு
சென்னை: சென்னையில் அபிராமிபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. 2 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடந்து வருகிறது. சட்ட விரோதமாக பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் மம்மூட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். தமிழில் ஓ காதல் கண்மணி, லக்கி பாஸ்கர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநராக இருப்பவர் பிரித்விராஜ்.

பூடானில் இருந்து சொகுசு கார்
இவரும் தமிழில் மொழி, நினைத்தாலே இனிக்கும் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான் அண்மையில் பூடானில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்த விவகாரத்தில் சிக்கினார். இந்தியாவின் அண்டை நாடான பூடான் நாட்டின் வழியாக நம் நாட்டுக்கு உயர்நிலைக் கார்களை கொண்டு வந்து, மத்திய அரசுக்கு வரி செலுத்தாமல் ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பூடானுக்கு கார்களை இறக்குமதி செய்யும் நபர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு அந்த கார்களை ஒரு கும்பல் வாங்கி, இமாச்சல பிரதேசத்துக்கு கொண்டு வந்து இங்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. வரி ஏய்ப்பு செய்யப்பட்ட இந்த கார்களை வாங்கிய விவகாரத்தில் துல்கர் சல்மான் சிக்கினார். அவருடன் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜும் சிக்கினார்.
காலையிலேயே ஈடி ரெய்டு
இருவரது வீடுகளிலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கொச்சியின் திவாரா பகுதியில் உள்ள பிரித்விராஜின் சொகுசு வீடு மற்றும் கொச்சியின் பனம்பள்ளி பகுதியில் உள்ள துல்கர் சல்மானின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில்தான், இன்று காலையிலேயே சென்னை அபிராமிபுரத்தில் நடிகர் துல்கர் சல்மானின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வீட்டிற்கு இன்று காலை 2 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சட்டவிரோத பண பரிமாற்றம்
சென்னையில் உள்ள நடிகர் மம்மூட்டிக்கு சொந்தமான இல்லத்தில் உள்ள அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் இந்த சோதனை நடந்து வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications