டாஸ்மாக் முறைகேடு.. சல்லடை போடும் அமலாக்கத்துறை! 3 நாளாக தொடரும் ரெய்டு.. டாஸ்மாக் ஊழியர்கள் கண்டம்
சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது நள்ளிரவு வரை சோதனை தொடர்ந்து வரும் நிலையில் இந்த சோதனைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மத்திய பா.ஜனதா அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை, தேசிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு என மத்திய அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. இந்த சூழலில், டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், மில்லியன் டாலர் வினாக்களை எழுப்புகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) தலைமை அலுவலகம், சென்னை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், மதுபானங்கள் வைப்பு மையம், முன்னாள் மதுவிலக்கு இணை கமிஷனர் வீடு என அரசு அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு, மிரட்டும் செயலில் ஈடுபட்டதை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. வழக்கு தொடர்பான விசாரணை எல்லையை தாண்டி, உயர் அதிகாரிகளையும், பணியாளர்களையும் மன உளைச்சலுக்கும், பதற்றத்துக்கும் ஆளாக்கி வரும் அமலாக்கத்துறையின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது." என கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் எனப்படும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் சில்லறை மது விற்பனை கடைகள் இருக்கிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது. இதில் நிர்ணயத்தை விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை , ஆகிய பகுதிகளில் சோதனை நீடிக்கிறது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் டாஸ்மாக், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சொந்தமான அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான நிறுவனம் அக்கார்டு ஹோட்டல், ஆயிரம் விளக்கு உள்ள எஸ்என்ஜெ டிஸ்டிலரீஸ், டி நகரில் உள்ள கால்ஸ் மதுபானம், சிவா டிஸ்டிலரீஸ், மயிலாப்பூர் ஆர் கே சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபானம் நிறுவனம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றது.
கோவைஒ நரசிம்மபாளையத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் தனியார் மதுபான ஆலை, விழுப்புரத்தில் எம்ஜிஎம் டிஸ்டலரீஸ், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் கோட்டையில் உள்ள கால்ஸ் டிஸ்கவரி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை சோதனை நீடித்தது. மேலும் சென்னை கோவை விழுப்புரம் புதுக்கோட்டையில் சோதனை நடத்தி கைப்பற்றியுள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில் தொடர்ந்து சோதனை தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தான் தற்போது டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications