அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசினார் செந்தில் பாலாஜி.. கடைசி ஆப்ஷனாகவே கைது.. அமலாக்கத்துறை பரபர!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை, விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கைது செய்யப்பட்டார் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு நடந்த ஆஞ்சியோ பரிசோதனையில் அவருக்கு இதயத்தின் முக்கிய ரத்தக் குழாயில் 4 அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரர் மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில் நீதிபதி அல்லி அனுமதி வழங்கினார். இதனையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த ஜூன் 21ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவர் நேற்று ஐ.சி.யூவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரியதை நிராகரித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்துள்ளது அதிருப்தி அளிக்கிறது எனத் தெரிவித்து அமலாக்கத்துறையின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்தனர்.
இந்த நிலையில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "செந்தில் பாலாஜியை ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 1:39 மணிக்கு கைது செய்யும் முன்பு அவரை சட்ட விரோதக் காவலில் வைக்கவில்லை. ஜூன் 13ஆம் தேதி நடந்த சோதனையின் போது அமைச்சர் அங்கு இருந்தார். அவரை சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு. சம்மனை அமைச்சர் செந்தில் பாலாஜி பெற மறுத்தார்.

அதிகாரிகளை மிரட்டும் தொனியில் அமைச்சர் செந்தில் பாலாஜி நடந்து கொண்டார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். சாட்சிகளை கலைத்து, ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் அவர் கைது செய்யப்பட்டார்.
நள்ளிரவிலேயே அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் அண்ணி நிர்மலா ஆகியோருக்கு போன் செய்தோம். கைது செய்யப்பட்டதைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்க முயற்சித்தோம். ஆனால் அவர்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்காததால் அவர்களிடம் தெரிவிக்க முடியவில்லை. இதையடுத்து குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக அவர்களுக்கு தெரிவித்தோம். கைதின் போது காரணங்கள் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களில் இருந்து, செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றம் புரிந்துள்ளார் என நம்ப போதுமான காரணங்கள் உள்ளன. பெரும் தொகையை டெபாசிட் செய்யப்பட்டதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. எதிர்காலத்தில் காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும்" என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
-
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
நடிகர் போஸ் வெங்கட் சர்ச்சை.. அறந்தாங்கி தொகுதியில் சீட் கேட்டு காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக!












Click it and Unblock the Notifications