11 பெண்கள்.. நிர்வாண வீடியோக்கள்.. அத்துமீறி அட்டகாசம் செய்த திண்டுக்கல் சாய்.. ஷாக் ஆன போலீஸ்!
சென்னை: மொத்தம் 11 பெண்கள்.. நிர்வாண வீடியோக்கள்.. அந்தரங்க பதிவுகள்.. என்றே வாழ்க்கையை கழித்துள்ளார் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர்.. ப்ராஜக்ட் செய்வதாக மனைவியை ஏமாற்றி.. 11 பெண்களை லேப்டாப் வைத்தே.. நாசம் செய்த இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிறுமி.. 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.. இவர் தன்னுடைய அம்மாவின் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறார்.. தன்னுடைய நிறைய போட்டோக்களையும் இதில் ஷேர் செய்துள்ளார்.
சின்ன பெண் என்பதால், விதவிதமாக டிரஸ்களை அணிவதும், அதை உடனே இன்ஸ்டாகிராமில் போடுவதுமாக இருந்துள்ளார்.. இவரது ஃபாலோயர் ஒருத்தர் ஏகப்பட்ட லைக்குகளை சிறுமிக்கு போட்டுக் கொண்டே இருப்பார்.. சிறுமியை வர்ணித்து, புகழ்ந்து கமெண்ட்களும் குவிந்தபடியே இருக்கும். எப்படி எப்படியோ முயற்சி செய்து, கடைசியில் இந்த பெண்ணின் போன் நம்பரை வாங்கிவிட்டார்.. பேசவும் ஆரம்பித்துவிட்டார்.

படுக்கை
இனிக்க இனிக்க பேசியதால், இன்ஸ்டாகிராம் தனி அக்கவுண்ட்டில் போட்டோக்களை அனுப்பிவைக்க ஆரம்பித்தார் இந்த மாணவி.. இந்த போட்டோக்களை வைத்து கொண்டு சிறுமியை படுக்கைக்கு அழைக்க.. மிரண்டு போன அந்த சிறுமி அந்த நபரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.

2 லட்சம் வேணும்
இதற்கு பிறகு மிரட்டல் ஆரம்பமானது.. இஷ்டப்படி கேட்காவிட்டால், அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டுவிடுவேன்.. இல்லையென்றால் 2 லட்சம் கொடு என்று மிரட்ட ஆரம்பித்தார்.. இந்த மிரட்டல் சிறுமியிடம் இல்லை.. அவரது அம்மாவிடம்.. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த தாய், வண்ணாரபேட்டை உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசரை சந்தித்து இந்த மிரட்டல் பற்றி கூறியுள்ளார். அதற்கு அவர், "2 லட்சம் தரேன்னு சொல்லி வர வைங்க" என்று ஐடியா தரவும், அதன்படியே வரவழைக்கப்பட்டார் அந்த இளைஞர்!

சாய்
அப்போது மறைந்திருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர்.. விசாரணையில், இவர் பெயர் சாய் என்கிற சாய் சிவசுந்தரம் என்பதும், திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.. இவர் ஒரு பிடெக் பட்டதாரியாம்.. கல்யாணம் ஆனவரும் கூட!

புராஜக்ட்
புராஜக்ட் செய்வதாக மனைவியை ஏமாற்றி தினமும் இப்படி இன்ஸ்டாகிராமில் போட்டோ போடும் பெண்களை மிரட்டியே பணம் பறித்து வந்திருக்கிறார்.. ஆபாச போட்டோவை காட்டி பணத்தை கறந்துவிடுவது.. பணம் தர முடியாத ஏழை பெண்கள் என்றால், பெண்கள் படிந்தால் காம இச்சைக்கு பயன்படுத்தி கொள்வது.. இதுதான் இவர் தொழில்.

மொத்தம் 11 பேர்
இப்படியே சில வருஷமாகவே செய்து வருகிறாராம்.. மொத்தம் 11 பெண்கள் இவரிடம் ஏமாந்துள்ளனர்.. ஒரு லேப்டாப்பை கூடவே வைத்திருக்கிறார் சாய்.. அதில், ஆய்வு செய்தபோதுதான் 10 பெண்களின் அந்தரங்க போட்டோக்களும் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த லேப்டாப், 3 செல்போன்கள், ஆபாச போட்டோக்கள் அடங்கிய மெமரிகார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. இப்போது சாய் சிறையில் உள்ளார்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications