என்ஜினீயரிங் மாணவர்களுக்கான கலந்தாய்வு.. ரேண்டம் எண் வெளியீடு
சென்னை: தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விரும்புபவர்களுக்கான ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் இன்று வெளியிடப்பட்டது.
தமிழ் நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் பி இ, பிடெக், பி ஆர்க் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 5 ஆம் தேதி தொடங்கியது. என்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்பபதிவு ஜுன் 4 ஆம் தேதியுடன் நிறைவடந்த நிலையில், இதுவரை மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர் இந்த மாணவர்களுக்கான தரவரிசயை முடிவு செய்யும் வகையில் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. ஒரே மாதிரியாக கட் ஆஃப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது ரேண்டம் என் மூலம் முடிவு செய்யப்படும்.
தரவரிசை பட்டியல் ஜூன் 26 ஆம் தேதி வெளியிடப்படும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது தொடர்பான புகார்களை ஜூன் 26 முதல் 30 ஆம் தேதி வரை சேவை மையங்களில் தெரிவித்து நிவாரணம் பெற முடியும். இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு, ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் 2-ந் தேதி தொடங்க உள்ளது.

ஜூலை 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதன் பிறகு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 24-ந்தேதி வரை நடக்கிறது. மாணவர்கள் ரேண்டம் எண் மற்றும் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்து உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications