நெகிழ்ந்த டாக்டர் மோகன் காமேஸ்வரன்.. "காதில் தேன்வார்த்தார்.." இதுதான் கருணாநிதி.. உடனே வந்த ஓகே!
சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையை இலவசமாக கொண்டு வந்தவர் கருணாநிதி என பிரபல காது மூக்கு தொண்டை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் பேசியது தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் கருணாநிதி மறைந்ததும் பிரபல மருத்துவர்கள் சார்பில் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று பேசிய கருணாநிதியின் ENT மருத்துவர் யார் அறிந்திடாத புது தகவல் ஒன்றை கூறினார்.

அதாவது கருணாநிதியை தாம் ஒரு முறை சந்தித்த போது, உனக்கு என்னய்யா வேண்டும் என்றும் ஏன் என்னிடம் எதுவுமே கேட்பதில்லை எனவும் கருணாநிதி கேட்டதாகவும் அதற்கு நான் ஒன்று உங்களிடம் கேட்பேன், ஆனால் பயமாக இருக்கிறது எனக் கூறியதாகவும் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறியிருக்கிறார்.
என்ன விஷயம் எதுவாக இருந்தாலும் சொல்லு என தன்னிடம் கருணாநிதி கேட்டுக் கொண்டதால், காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை வேண்டும் என தாம் கூறியதாக தெரிவித்தார். காக்ளியர் இம்ப்ளாண்ட் என்றால் என்ன என மீண்டும் கருணாநிதி கேட்டதால், தன்னிடமிருந்த லேப்டாப்பில் உள்ள ஒரு வீடியோவை அவருக்கு காண்பித்து அது குறித்து விளக்கியதாக தெரிவித்தார்.
பிறவியிலேயே ஊமையாக இருக்கும் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு காக்ளியர் இம்ப்ளான் சிகிச்சை செய்யப்பட்டதால் அந்தக் குழந்தையால் கேட்க முடிவதாகவும் மற்றொரு குழந்தை ஏழை குடும்பத்தை சேர்ந்தது என்பதால் அதற்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை செய்ய முடியவில்லை எனவும் தாம் விளக்கியதாக தெரிவித்தார்.
இதையடுத்து எவ்வளவு செவவாகும் என கருணாநிதி கேட்டதாகவும் அப்போது ரூ.6 லட்சம் ஆகும் என தாம் கூறிய போது அவ்வளவு தானே என்று கூறிவிட்டு ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளும் பேசவும், செவிதிறனும் பெறும் வகையில் காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையை கட்டணமின்றி இந்தியாவில் முதல்முறையாக கருணாநிதி அறிமுகம் செய்தார் என்ற வரலாற்றை கூறினார்.
கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நாளை தொடங்கும் நிலையில், டாக்டர் மோகன் காமேஸ்வரனின் இந்த வீடியோ பதிவு மீண்டும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications