கொள்கை விளக்க குறிப்பை 8 மணிக்குதான் தர்றாங்க.. எடப்பாடி ஆதங்கம்.. சிரித்துக்கொண்டே சபாநாயகர் பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்கூட்டியே கொள்கை விளக்க குறிப்பை அளிக்கவில்லை. ஏற்கனவே பேரவையில் புகார் அளித்தும் முந்தைய நாள் இரவு 8 மணிக்குதான் மானியக் கோரிக்கை புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினார். அதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதில் அளித்தார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. இன்று காலை சட்டசபை கூடியதும் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்.

tn assembly edappadi palaniswami speaker

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்த தலைப்பில் விவாதிக்க சபாநாயகர் அனுமதியளிக்காததால் திமுகவினர் கூச்சலிட்டு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசுகையில், முன்கூட்டியே கொள்கை விளக்க குறிப்பை அளிக்கவில்லை. ஏற்கனவே சட்டப்பேரவையில் புகார் அளித்தும் தாமதமாகவே மானியக் கோரிக்கை புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன, முந்தைய நாள் இரவு 8 மணிக்குத்தான் கொள்கை விளக்க குறிப்புகள் வழங்கப்படுகின்றன என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினார்.

அதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நகைச்சுவையாக, "எனக்கு ஒரு அட்வாண்டேஜ் என்னவென்றால், கொள்கை விளக்கக் குறிப்பு தாமதமாக வருவதால் கொஞ்சமாக பேசி சீக்கிரமாக முடிப்பீர்கள் என்று நம்புகிறேன்" என சிரித்தபடியே கூறினார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, "ஏங்க.. மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்குத்தானே வருகிறோம். பல துறை மானியக் கோரிக்கைகள் ஒரே நாளில் நடக்கின்றன. கொள்கை விளக்கக் குறிப்பு தாமதமாக வழங்குகிறார்கள்.. 24 மணி நேரத்துக்கு முன்பே வழங்க ஆவன செய்யவேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "2 நாட்களுக்கு முன்பே தர வேண்டும் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். சட்டசபை கூடும்போது, மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்புகளை படித்தால் தான் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க முடியும். எனவே அமைச்சர்களுக்கு மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன். 24 மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+