'நாம ஒற்றுமையா இருக்கோணும்''... அ.தி.மு.கவினருக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்றி அதிமுகவுக்கு வெற்றியை ஈட்டுவது குறித்து அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது என்று ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

பிரசாரங்கள், துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள் மூலம் மக்களிடம் அதிமுக அரசின் சாதனை கொண்டு சேர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வருகை தர உள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

சசிகலா வருகிறார்

சசிகலா வருகிறார்

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வருகை தருகிறார். அதிமுக நிர்வாகிகள் ஆங்காங்கே சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். சென்னையில் அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையிலும் கூட சசிகலா ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் மகன் வாழ்த்து

ஓபிஎஸ் மகன் வாழ்த்து

சசிகலா விவகாரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் தரப்பு இதுவரை அமைதியாக இருக்கிறது. ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், வெளிப்படையாக சசிகலா நலம்பெற வாழ்த்தும் சொல்லி இருக்கிறார்.

அதிமுக ஆலோசனை

அதிமுக ஆலோசனை

இந்த நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சசிகலா விவகாரம் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தியாக கூறப்படுகிறது.

ஒற்றுமை வேண்டும்

ஒற்றுமை வேண்டும்

இந்த நிலையில் இந்த கூட்டம் முடிந்த பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுளளதாவது:-
அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. எத்தனை நுற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காக இயங்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறுவார். எனவே ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்றி அதிமுகவுக்கு வெற்றியை ஈட்டுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

அரசின் சாதனை

அரசின் சாதனை

அதிமுக நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள். பிரசாரங்கள், துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள் மூலம் மக்களிடம் அதிமுக அரசின் சாதனை கொண்டு சேர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+