செங்கோட்டையன் குறுக்கே வந்தாலும்.. அசராத எடப்பாடி பழனிசாமி.. அடுத்த கட்ட பிரசாரம் செப்.17ல் துவக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இவரது 5 ஆம் கட்ட சுற்றுப்பயண விவரம் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 26 வரை எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வரும் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஐந்தாம் கட்டமாக பயணம் மேற்கொள்ளும் மாவட்டங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சட்டமன்றத் தொகுதி வாரியாக புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPS Announces 5th Phase of Campaign Tour To Cover Constituencies from Sept 17 26 Ahead of 2026 Polls

கடந்த 5ஆம் தேதி கட்சி தலைமைக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருந்தார். ஒன்றுபட்ட அதிமுகவிற்கான வேலைகளை அடுத்த 10 நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் அதிருப்தியாளர்கள் உடன் தாமே முன்னின்று வேலைகளை தொடங்கப் போவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவர் வகித்து வந்த கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.

மேலும், செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் தனது பயணத்தை எடப்பாடி பழனிசாமி ஒத்தி வைப்பாரா அல்லது தொடர்வாரா என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் எழுந்தது. இதற்கிடையில் தான் தன்னுடைய 5ஆம் கட்ட சுற்றுப்பயணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதன்படி, எடப்பாடி பழனிசாமியின் 5ஆம் கட்ட சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் திரண்டு வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5ம் கட்ட சுற்றுப்பயண திட்டம் - செப்.17 முதல் செப்.26 வரை

17.9.2025 - தருமபுரி மாவட்டம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டசபை தொகுதிகள்

18.9.2025- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பென்னாகரம் சட்டசபை தொகுதிகள்

19.9.2025 - நாமக்கல் - ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிகள்

20.9.2025 - நாமக்கல் - நாமக்கல், பரமத்தி வேலூர் சட்டசபை தொகுதிகள்

21.09.2025 - நாமக்கல் - திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டசபை தொகுதிகள்

23.09.2025 - நீலகிரி - குன்னூர், உதகமண்டலம் சட்டசபை தொகுதிகள்

24.09.2025 - நீலகிரி - கூடலூர் தொகுதி

25.09.2025 - திண்டுக்கல் மேற்கு - வேடசந்தூர் சட்டசபை தொகுதி கரூர் - கரூர் ( கரூர் டவுன்)

26.09.2025 - கரூர் - அரவக்குறிச்சி (வேலாயுதம்பாளையம்), கிருஷ்ணராயபுரம் (தரகம்பட்டி), குளித்தலை (தோகைமலை)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+