“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு!
கன்னியாகுமரி: "அதிமுக என்ற கட்சி பாஜகவின் கொத்தடிமை கட்சியாக மாறிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு காவடி தூக்குகிறார்." எனக் காட்டமாக விமர்சித்துப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்குகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 176 வேட்பாளர்கள் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது தேர்தல் பரப்புரையை திருவாரூரில் தொடங்கினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை (ஏப்ரல் 4) நாகர்கோயிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களான மகேஷ், ஆஸ்டின், ராஜேஷ் குமார், தாரகை கட்பெத், பிரவீன், செல்வசுவாமி ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.
தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார் முதல்வர் ஸ்டாலின். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதியான இல்லத்தரசிகள் கூப்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விவரித்து பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், "நேற்று நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசிய தரம் கெட்ட பேச்சை கண்டித்து நான் பேசுகிறேன். அதைக் கேட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சிக்காரர்கள் போனிலும், சமூக வலைதளங்களிலும் தங்களது ஆதரவை என்னிடம் கொட்டித் தீர்த்தார்கள். 'எங்கள் மனதில் இருந்ததைப் பேசிவிட்டீர்கள். எங்கள் மனதில் என்னென்ன இருந்ததோ அதையெல்லாம் பேசிவிட்டீர்கள்' என்று சொன்னார்கள்.
மறைந்த தலைவர்களைப் பற்றி இப்படித் தவறாகப் பேசுவது அரசியல் மாண்பு அல்ல. அம்மையார் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரை எதிர்த்தும், அவரது ஆட்சியில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியும் நாம் நேரடியாக அரசியல் செய்திருக்கிறோம். ஆனால் அவர் மறைந்த பிறகு உச்சபட்ச அரசியல் நாகரீகத்தை நாம் இன்றும் கடைப்பிடித்து வருகிறோம்.
திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்கென்று யோகம் அடித்த மாதிரி எடப்பாடி பழனிசாமியிடம் இந்த நாகரீகத்தை எதிர்பார்க்க முடியுமா? அவர் இப்படிப் பேசுவது இது முதல் முறை அல்ல. 2019 தேர்தலின்போது 'கலைஞரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள், இது பற்றி அரசு விசாரிக்கும்' என்று வாய்க்கொழுப்போடு பேசினார்.
அதற்குப் பிறகு என்ன ஆயிற்று? மக்களால் அவர் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகும் மேலும் மேலும் தோல்விகளைச் சந்தித்தாலும், அதிலிருந்து அவர் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. 2021, 2024, 2026 எனப் பழைய ரெக்கார்டு போலவே சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தமிழக மக்கள் கொள்கையைப் பேசுவதைத்தான் ஆதரிப்பார்கள். வாய்க்கொழுப்போடு பேசினால் அதை வரவேற்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் சொல்வதற்கு சாதனைகள் எதுவும் இல்லை; மக்கள் பட்ட வேதனைகள்தான் உள்ளன. பாஜகவிற்கு எதிராகக் குரல் கொடுக்கக்கூட துணிச்சல் இல்லை.
மதவெறி பார்வையுடன் செயல்படும் மத்திய பாஜக அரசின் செயல் மனித குலத்திற்கே எதிரானது. இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் செய்யும் பணியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி விட்டார். அதிமுக என்ற கட்சி பாஜகவின் கொத்தடிமை கட்சியாக மாறிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை காப்பாற்ற இபிஎஸ் டெல்லிக்கு காவடி தூக்குகிறார்." எனக் காட்டமாக விமர்சித்துப் பேசினார்.
நாகர்கோவில் பரப்புரை தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "கொளுத்தும் வெயிலிலும் குமரி மாவட்ட மகளிர் வெளிப்படுத்திய energy சொல்லிவிட்டது, திராவிட மாடல் 2.0 அமைவதை யாரும் தடுக்க முடியாது! நாகர்கோயிலில் இன்று மக்கள் என்னுடைய உரைக்கு அளித்த வரவேற்பிலேயே குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் வெல்லும் என்பது முடிவாகிவிட்டது.
மதவெறியோடு சிறுபான்மையின மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டுச் சட்டங்களைக் கொண்டு வரும் பா.ஜ.க.வையும், அதற்குத் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல துணைபோகும் அ.தி.மு.க.வையும் மீண்டுமொருமுறை நிராகரிக்கத் தமிழ்நாடு காத்திருக்கிறது!" எனத் தெரிவித்துள்ளார்.
-
திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 விசிக வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்? -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திருத்தணியில் தவெக வேட்பாளருக்கு வந்த தனிமை கொடுமை.. விஜய் கட்சியில் தெறித்து ஓடும் நிர்வாகிகள்? -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
மூணு தோல்வி அண்ணாமலை பெயரை தவிர்க்கவே போட்டியில்லை.. வாசகர் அங்கமுத்து ஆதங்கம் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
விளவங்கோடு முதல் ஊட்டி வரை! காங்கிரஸின் 27 வேட்பாளர்கள்! பாஜகவுடன் ஸ்ட்ரைட்டா மோதும் 4 தொகுதி! -
விஜய்க்கு ஓட்டு போட மாட்டியா? பெற்றோரின் SIR படிவத்தை வேண்டுமென்றே சமர்பிக்காமல் வைத்த மகன்!












Click it and Unblock the Notifications