தனக்குத் தானே தாய்மாமன் பட்டம்.. விஜய்க்கு டிகே சிவக்குமாரை பார்த்து பயமா? விளாசிய எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைக்கட்ட கர்நாடகா பணிகளை விரைவுபடுத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அணை அமைய இருப்பதாக சொல்லப்படும் இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு பார்வையிட்டதாகவும், மத்திய அமைச்சரை கர்நாடக முதல்வர் சிவக்குமார் சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகா முதல்வரை பார்த்து பயமா? என தமிழக முதல்வர் விஜயை விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி.

மீண்டும் தமிழகம் கர்நாடகா இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது மேகதாது அணை விவகாரம். மீண்டும் மேகதாது அணை அமைப்பதற்கான பணிகளை கர்நாடகா தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Edappadi Palaniswami

நேற்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் டிகே சிவகுமார் மேகதாது விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி உள்ளது எனவும், தமிழகத்துக்கு மிக அருகில் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தொலைவிற்குள் அணை அமைய இருப்பதாக கூறினார்.

மேலும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிஆர் பாட்டிலை சந்தித்து பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில் கர்நாடகா முதல்வரை பார்த்து பயமா? என தமிழக முதல்வர் விஜயை விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட தாய்மாமா என்ன செய்யப் போகிறார்? மேகதாது அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

இதுகுறித்து இன்னமும் தமிழக அரசு சார்பில் எந்த செய்தியும் வரவில்லை. கர்நாடகத்துடன் தமிழக அரசு கூட்டு சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலுக்குத் துணை போகிறதா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுகிறது. மேகதாது அணை கட்டுமான அனுமதி கேட்டு கர்நாடக முதலமைச்சர் டிகே சிவக்குமார், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு. சிஆர் பாட்டீல் அவர்களை சந்தித்துப் பேசியிருப்பதும் சந்தேகத்தை உண்டாக்குகிறது.

தமிழகம் புதுச்சேரி ஒப்புதல் இல்லாமல் புதிய அணையோ, நீர் தேக்கமோ கட்ட இயலாது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை முதல்வர் அறிவாரா? தண்ணீர் திறப்புக்கும் வாய் திறக்கவில்லை. அணை கட்ட தடுப்பதற்கு வாய் திறக்கவில்லை. கர்நாடக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசுக்கும் ரீல் முதல்வருக்கும் கடுமையான கண்டனம். உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+