மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரா? பற்ற வைத்த எடப்பாடி.. பாய்ந்து வந்த டிடிவி தினகரன்
சென்னை: மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது. கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் ஈபிஎஸ் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் பேசுகையில், "தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர். தனது சொத்துகளை சாதி, மதம் பார்க்காமல் மக்களுக்குத் தானம் செய்தவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். மேலும் மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்ட வலியுறுத்தப்படும்" என்றும் தெரிவித்தார்.

எடப்பாடி பேச்சால் பரபரப்பு
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தப்படும் என்ற எடப்பாடி பழனிசாமியின் பேச்சு பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதிப் பூங்காவாக இருக்கும் தென் தமிழ்நாட்டில் தேவையற்ற பிரச்சனையை எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
தேவருக்கு இழுக்கு - டிடிவி தினகரன்
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில், "அமைதிப் பூங்காவாக இருக்கும் தென் தமிழ்நாட்டில் தேவையற்ற வசனங்களை பேசிவிட்டு, பசும்பொன் தேவர் திருமகனார் பெயரில் எடப்பாடி பழனிசாமி செய்யும் சமூக விரோத நடவடிக்கைகளை மக்கள் உறுதியாக ஏற்கமாட்டார்கள். எல்லா சமுதாய மக்களும் தேவரை மதிக்கின்ற பூமியில், சகோதரராக வாழ்கின்ற பூமியில் பசும்பொன் தேவர் ஐயாவுக்கு இழுக்கு ஏற்படும் விதமாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணசாமி ஆவேசம்
முன்னதாக, எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி காட்டமாக பதிலடி கொடுத்தார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "மதுரை விமான நிலையம் - தற்போது "சின்ன உடைப்பு" எனும் தேவேந்திர குல வேளாளர்கள் பெருமளவில் வாழ்ந்து வரும் கிராம மக்களின் நிலங்களில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவ பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட இந்த விமான நிலையம், பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்துக்காகத் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக தேவேந்திர குல வேளாளர்களிடமிருந்து நிலங்கள் மிகக் குறைந்த இழப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளதோடு, பலர் தன்னார்வமாகவும் தங்கள் நிலங்களை வழங்கியுள்ளனர். பொதுவாக, அரசு பயன்பாட்டிற்காக தனிநபர் அல்லது சமுதாய நிலங்கள் ஒப்படைக்கப்படும்போது, அந்த நபர் அல்லது சமூகத்தினர் விரும்பும் பெயரை, அந்த இடத்திற்கு சூட்டுவது நடைமுறையாக இருந்து வந்துள்ளது. அதே அடிப்படையில், தீண்டாமைக்கு எதிராகவும், சமூக நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்த சுதந்திரப் போராட்டத் தியாகி, வீரரும் மனித உரிமைப் போராளியுமான "தியாகி இமானுவேல் சேகரனார்" பெயர் மதுரை விமான நிலையத்திற்கு சூட்டப்பட வேண்டுமென்பது மிகவும் நியாயமான கோரிக்கை.
எடப்பாடியின் அரசியல் நலனுக்கே பாதகம்
இவர் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் ஆளாவதுடன், அவரது வாழ்நாள் முழுவதும் சமூக நலனுக்காகவே செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மதுரை விமான நிலையத்திற்கு இடம் வழங்கிய தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உண்மையான வேண்டுகோளாகவும், தென் தமிழகம் முழுவதும் இந்த வேண்டுகோளுக்கு வலியாய ஆதரவாகவும் இது இருக்கிறது. விமான நிலையத்திற்குப் பெயர் சூட்டுவது குறித்து விவாதம் எழும்போதெல்லாம், தியாகி இமானுவேல் சேகரனாரின் பெயரையே பெரும்பாலான தரப்பினர் பரிந்துரைத்துள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, மதுரை விமான நிலையத்திற்குப் பெயர் சூட்டுவது குறித்து ஒரு தரப்பு பார்வையில் கருத்து வெளியிட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இதைப் பற்றியெந்த கருத்தும் கடந்த ஆட்சிக்காலத்தில் வெளியிடவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். இந்நேரத்தில், தேர்தல் போட்டியில் உள்ள தங்களது சவால்களை சரிசெய்வதில் கவனம் செலுத்தாமல், தேவையற்ற விவாதங்களைத் தூண்டுவது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நலனுக்கே பாதகமாக அமையலாம்" என்று தெரிவித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications