"தவெக உடன் அதிமுக எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை”.. பட்டென சொன்ன எடப்பாடி பழனிசாமி
சென்னை: தவெகவுடன் அதிமுக எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். என்.டி.ஏ கூட்டணியில் தவெக இணைய இருப்பதாக யூகங்கள் எழுந்து வரும் நிலையில், அதனை மறுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இதன் காரணமாக, தமிழகத்தில் தேர்தல் களத்தில் அனல் பறந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவி வருகிறது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கரூர் துயர சம்பவத்தின் போது அதிமுக, பாஜகவினர் விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தனர். மேலும், திமுக அரசின் அலட்சியம் தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் எனவும் அவர்கள் விமர்சித்தனர். இதனால் அதிமுக - தவெக இடையே கூட்டணி உருவாகுமா? என்ற பேச்சுகளும் அப்போது அடிபட்டன.
குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற ஒரு கூட்டத்தில், தவெக கொடி பறந்தது முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியும், நம் கூட்டணிக்கு பிரமாண்டமான கட்சி வருகிறது எனக் கூறி வந்தார். அந்த சமயத்தில், தவெகவும் அதிமுகவை எதிர்க்காமல் இருந்தது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் விஜய் விமர்சித்து வருகிறார். திமுகவை தீய சக்தி என்றும், அதிமுகவை ஊழல் சக்தி எனவும் அவர் விமர்சித்தார். இந்நிலையில் தான் தற்போது திமுகவின் மெகா கூட்டணிக்கு ஈடு கொடுக்கும் வகையில் என்டிஏ கூட்டணியில் தவெகவை இணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்றிருக்கும் தவெகவை கூட்டணியில் இணைத்தால் பெரும் பலமாக இருக்கும் என பாஜக கருதுவதாக தெரிகிறது. எனவே, தவெகவை கூட்டணியில் இழுப்பதற்காக பாஜக டெல்லி தலைமை காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
என்டிஏ கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை இணைவது தொடர்பாக ஜன சேனா தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண், விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். கூட்டணியில் வேறு கட்சிகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது, அதற்கான சூழல் இருக்கிறது எனத் தெரிவித்தார்.
விஜய் கூட்டணிக்கு வரவேண்டும் என விரும்புகிறீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இதுவரை அதிமுகவோ, எங்கள் கூட்டணியை சேர்ந்த தலைவர்களோ அந்த கட்சியுடன் கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை" என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
-
அன்று சிரஞ்சீவி.. இன்று விஜய்.. இத்தனை ஒற்றுமைகளா? ரிசல்ட் எப்படி இருக்கும்? -
"மிஸ்ராவை மிஸ் பண்ணிடாதீங்க"! வீல்சேரில் வந்த பொன்னம்பலமா இது! தவெகவுக்கு பிரச்சாரம் செய்றாரே! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்! -
எடப்பாடி பழனிசாமிக்கு கொலைவெறி அடங்கவில்லை.. 1979ல் நடந்த சம்பவம்.. ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்! -
விஜய் நாளை காரைக்குடியில் பிரச்சாரம்.. மரங்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு.. ப்ளூ சட்டை மாறன் -
விஜய் உடன் மல்லுக்கட்டும் இனிகோ இருதயராஜ்.. திருச்சி கிழக்கு திமுக வேட்பாளரின் பலம், பலவீனம் என்ன? -
எடப்பாடியில் 'திக் திக்'.. மாயமான த.வெ.க வேட்பாளர்.. பாத்ரூம் போனவர் ஆப்சென்ட்.. எடப்பாடிக்கு லக்! -
பிரச்சார வாகனத்தில் இருந்து திடீரென சைக்கிளுக்கு தாவிய விஜய்.. காரைக்குடியில் சூழ்ந்த தவெகவினர்! -
லீக்கான ‘ஜனநாயகன்'.. வலைதளங்களில் பரவும் 5 நிமிட காட்சிகள்.. விஜய் – படக்குழுவுக்கு அதிர்ச்சி












Click it and Unblock the Notifications