திமுகவை வீழ்த்த! எடப்பாடி பழனிசாமியின் பலே பிளான்! அதிமுகவின் புதிய கூட்டணி? அவரே கொடுத்த பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி சூசகமான பதில்களை அளித்துள்ளார். நாம் தமிழர் கட்சி உட்பட மற்ற கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு குறித்து அவர் எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை.

ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் இங்கே:

politics edappadi palanisamy tvk

2026 தேர்தல் வெற்றி வாய்ப்பு

கேள்வி: 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்: 2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சியில் கடந்த 50 மாதங்களில் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் போதைப்பொருள் கடத்தல், கள்ளச்சாராய மரணங்கள், கொலை, திருட்டு, பாலியல் வன்முறைகள், விலைவாசி உயர்வு, வரி உயர்வு என மக்களுக்குப் பாதகமான அனைத்து விஷயங்களும் அதிகரித்துள்ளன.

ஸ்டாலின் மாடல் அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற ஊழல் அரசு இருந்ததில்லை. ஜூலை 7 ஆம் தேதி நான் தொடங்கிய 'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' பயணத்துக்கு அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.

கூட்டணி ஆட்சி சாத்தியமா?

கேள்வி: சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்குப் பெரும்பான்மை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தமிழகத்தில் முதன்முறையாகக் கூட்டணி ஆட்சியை அமைக்க வாய்ப்பு உள்ளதா?

பதில்: யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு நான் எப்படிப் பதில் சொல்ல முடியும்? அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

பாஜக தலைமை மாற்றம், கூட்டணி

கேள்வி: பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை தொடராமல் இருப்பதற்கும், அதிமுக - பாஜக கூட்டணி அமைவதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

பதில்: மற்ற கட்சிகளின் விவகாரங்களில் அதிமுக எப்போதும் தலையிடுவதில்லை.

விஜய்யுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை?

கேள்வி: விஜய்யுடன் நீங்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறீர்களா?

பதில்: எங்கள் தேர்தல் உத்திகளையும், திட்டங்களையும் பற்றி வெளிப்படையாகக் கூற முடியாது.

பாஜக vs தவெக: எது வலிமையான கூட்டணி?

கேள்வி: விஜய் இறங்கி வந்தால் பாஜகவுடன் கூட்டணியை முறித்து தவெகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?

பதில்: யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.

கேள்வி: பாஜக - தவெக இரண்டு கட்சிகளில் எது வலிமையான கூட்டணி கட்சியாக இருக்கும்?

பதில்: பாஜக ஒரு தேசியக் கட்சி. பல மாநிலங்களில் ஆளும் கட்சி. ஒவ்வொரு கட்சிக்கும் அதற்கான பலம் இருக்கிறது. நாங்கள் எந்தக் கட்சிகளையும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. மக்களுக்கு எதிராகச் செயல்படும் திமுக ஆட்சியை வீழ்த்த, ஒரே மனநிலையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும்.

திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி?

கேள்வி: திமுக கூட்டணியில் உள்ள விசிக, இடதுசாரிகள் போன்ற கட்சிகளுடனும், நாம் தமிழர் கட்சியுடனும் கூட்டணி அமைப்பதைப் பற்றி அதிமுக யோசித்துள்ளதா?

பதில்: திமுக ஆட்சியை அகற்ற அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார். இதில் என்ன தவறு இருக்கிறது?

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடக்கும் என்றும் தமிழக அமைச்சரவையில் பாஜகவினர் இடம் பெறுவார்கள் என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இதை அதிமுக நிர்வாகிகள் மறுத்து வருகிறார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+