முட்டுக் கொடுத்த எடப்பாடி.. விட்டுக் கொடுக்காத விஜய்! கூவிக் கூவிக் அழைத்தும் கூட்டணிக்கு வரலையே!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயை எப்படியாவது அதிமுக கூட்டணிக்கு கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆர்பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி என முன்னாள் அமைச்சர்கள் கூவி கூவி அழைத்தும் அது தொடர்பான எந்தவித ரியாக்ஷனும் தமிழக வெற்றி கழகத்தின் தரப்பிலிருந்து வரவில்லை. கரூர் விஷயத்தில் எவ்வளவோ ஆதரவாக பேசும் விஜய் கூட்டணிக்கு ஆதரவாக திரும்பாதது அதிமுக தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுகவை எதிர்க்க வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என முயன்று வருகிறார் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி.
தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணியில் பாஜகவும், ஏற்கனவே அந்த கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தான் இருக்கின்றன. திமுக அசுர பலத்துடன் களத்தில் இருக்கும் நிலையில் அதனை சமாளிக்க மிகப்பெரிய கூட்டணி அதிமுகவுக்கு தேவை.

எடப்பாடி பழனிச்சாமி
அதனால்தான் பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு தமிழக அரசியலில் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணிக்கு கொண்டுவர எடப்பாடி பழனிச்சாமி முயன்று வருகிறார். பாமக கிட்டத்தட்ட அதிமுக கூட்டணியில் இணைந்து விட்ட நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே வர வேண்டும். ஜனவரியில் நடைபெறும் மாநாட்டுக்குப் பிறகு கூட்டணி குறித்து பேசுவோம் என உறுதியாக சொல்லி இருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். மேலும் அதிமுக கூட்டணியோடு திமுக தரப்பிலும் அவர் பேசி வருவதாக சொல்லப்படும் நிலையில் தேமுதிக நூற்றுக்கு நூறு சதவீதம் அதிமுக கூட்டணிக்கு வரும் என சொல்ல முடியாது.
அதிமுக கூட்டணி
கடைசி நேரத்தில் கூட கூட்டணி கணக்குகள் மாறலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இது ஒரு புறம் இருக்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை கூட்டணிக்கு வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியின் வெளிப்படையாகவே அறிவிப்பு வெளியிட்டார் எடப்பாடி. அவரது பிரச்சார பயணத்தில் கொடியோடு பங்கேற்ற நிலையில் கூட்டணிக்கான அச்சாரம் போடப்பட்டு விட்டது என மகிழ்ச்சியுடன் சொன்னார் எடப்பாடி. ஆனால் அது தங்கள் கட்சியினர் இல்லை என தமிழக வெற்றிக்கழகம் மறுப்பு தெரிவித்தது.
விஜய் கூட்டணி
முன்னதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற போது விஜய்க்கு ஆதரவாக பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. எந்த தலைவரும் தனது தொண்டன் உயிரிழக்க வேண்டும் என நினைக்க மாட்டார் என பேசியதோடு அடுத்தடுத்த நிகழ்வுகளில் அதிமுக பேச்சாளர்கள் விஜய்க்கு ஆதரவாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் விவாதங்களிலும் பேசி வந்தனர். இது ஒருபுறம் இருக்க அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர் பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி போன்ற விஜய் நிச்சயம் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் அப்போதுதான் அரசியல் களத்தில் வெற்றி பெற முடியும் திமுகவையும் தோற்கடிக்க முடியும் என கூவி கூவி அழைத்து வருகின்றனர்.
விஜய் அரசியல்
ஆனால் இதுவரை ஒரு முறை கூட அதிமுக கூட்டணி குறித்து விஜய் பேசவே இல்லை. மேலும் இரண்டாம் கட்ட தலைவர்களும் அது குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். விஜயை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் என்பதில் உறுதியாக இருக்கிறார். பாஜக அதிமுக கூட்டணிக்கு சென்றால் கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது போல் ஆகிவிடும், தனது முதல்வர் கனவு தகர்ந்து விடும் என்பதால் அதிமுக கூட்டணிக்கு இசைவு தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் கரூர் விவகாரத்தில் எவ்வளவோ முட்டுக் கொடுத்தும் விஜய் விட்டுக் கொடுக்க மறுப்பதாக அதிருப்தியில் இருக்கிறது அதிமுக தரப்பு.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன்












Click it and Unblock the Notifications