இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் முருகனின் அறுபடை வீடுகளை குறி வைத்து ஆறு தொகுதிகளில் களம்பிறக்க பாஜக முடிவு செய்திருந்தது திருப்பரங்குன்றம் பழனி திருச்செந்தூர் சுவாமிமலை பழமுதிர்சோலை திருத்தணி ஆகிய தொகுதிகளை பாஜக கேட்ட நிலையில் சாதுரியமாக செயல்பட்டு ஒரு பகுதியை மட்டும் அக்கட்சிக்கு ஒதுக்கி இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி இதனால் பாஜகவின் அறுபடை வீடு பாலிடிக்ஸ் கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக முக்கியமான அரசியல் திட்டம் தீட்டியிருந்தது. அது, தமிழகத்தில் முருக பக்தி உணர்வுடன் தொடர்புடைய முக்கிய ஆன்மீக தலங்களாக அறியப்படும் அறுபடை வீடுகள் உள்ள தொகுதிகளில் போட்டியிடுவது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், சுவாமிமலை முருகன் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில் மற்றும் திருத்தணி முருகன் கோவில் உள்ள தொகுதிகளை குறிவைத்தது பாஜக.
இந்த ஆறு இடங்களும் அமைந்துள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மூன்று தொகுதிகளையாவது பெற வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக முன்வைத்ததாக கூறப்படுகிறது. ஆன்மீக அடையாளத்தை அரசியல் வியூகமாக மாற்றி வாக்குகளை ஈர்க்க பாஜக திட்டமிட்டது.
2026 சட்டசபை தேர்தல்
இதில் முக்கிய தொகுதி திருப்பரங்குன்றம் தொகுதி. கடந்த சில மாதங்களுக்கு முன் அங்கு ஏற்பட்ட தீபத்தூண் விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.. அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதை, முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியாக பாஜக எடுத்துக்காட்ட முயன்றது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் கணிசமாக உள்ளன. அதேபோல் தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் பிற சமூக வாக்குகளும் முக்கிய பங்காற்றுகின்றன. இதனை கருத்தில் கொண்டு வலுவான வேட்பாளரை நிறுத்தி ஆதரவை ஒருங்கிணைக்க பாஜக திட்டமிட்டது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் தொகுதியில் நாடார் மற்றும் மீனவர் சமூக வாக்குகள் முக்கியமானவை என்பதால், அந்த சமூகத்தை சேர்ந்த வேட்பாளரை நிறுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் பழனி தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர், தேவர் மற்றும் நாயக்கர் சமூக வாக்குகளை குறிவைத்து திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருத்தணி பகுதியில் வன்னியர் மற்றும் தலித் சமூக வாக்குகளை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அறுபடை வீடு
குறிப்பாக எல்லைப்பகுதிகளில் உள்ள தெலுங்கு பேசும் மக்களிடமும் ஆதரவை பெற முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாபநாசம் தொகுதியில் அடங்கியுள்ள சுவாமிமலை பகுதியை மையமாக வைத்து ஆன்மீக அரசியலுடன் டெல்டா விவசாய பிரச்சினைகளையும் இணைத்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணி
இந்த சூழலில், அதிமுக கூட்டணியில் பாஜக கேட்ட முதல் தொகுதியே திருப்பரங்குன்றம் தான். ஆனால் அங்கு மதுரை மாவட்ட செயலாளராக இருக்கும் ராஜன் செல்லப்பா தனக்கு திருப்பரங்குன்றம் தொகுதி தான் வேண்டும் என பிடிவாதமாக இருந்து அந்த தொகுதியை பெற்று விட்டார். இதனால் பாஜக அங்கு போட்டியிட முடியவில்லை. இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நாடார் சமுதாய வாக்குகள் இருப்பதால் அந்த ஒரு தொகுதியை மட்டும் பாஜகவுக்கு கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடி பழனிசாமி
மூன்றாம் படை வீடான பழனியில் அதிமுகவின் ரவி மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் வாக்கு சேகரித்து வருகிறார். நான்காம் படை வீடான சுவாமிமலை உள்ள பாபநாசம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஹரியும், ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலை இருக்கும் மேலூர் தொகுதி அதிமுக வசம் இருப்பதால் அங்கும் அதிமுகவை களம் இறங்குகிறது. இதனால் பாஜக திட்டமிட்டிருந்த "அறுபடை வீடு அரசியல்" முழுமையாக கைகூடவில்லை என்றே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கு எடப்பாடி தான் காரணம் என்றும் கூறுகின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து.. விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாராம்! -
46 தனி தொகுதிகளில் நுழையும் அவர்கள் யார்? மதம் மாறியவர்களுக்கு இடமா? இந்து முன்னணி நறுக் -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
வேட்பு மனுக்களை என்னென்ன காரணங்களுக்கு நிராகரிக்க கூடாது? தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 4 நாள் லீவை விடுங்க! ‘இதை’ மட்டும் கண்டிப்பாக மறக்காதீங்க! -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்!












Click it and Unblock the Notifications