எல்லாம் பசும்பொன் தேவருக்காக தான்? டெல்லிக்கு பரபர பயணம்! அமித்ஷாவுடன் எடப்பாடி ஆலோசனை! இதற்காகவா?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவே அவர் டெல்லி சென்றதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அமித்ஷாவை அவர் சந்தித்துப் பேசியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் அமித்ஷாவிடம் பேசியது என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
நாளுக்கு நாள் அதிமுகவில் நடக்கும் உட்கட்சி மோதல்கள் வலுத்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக அதிமுக விவகாரங்களில் பாஜக தலையிடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அதிமுகவும் பாஜகவும் இதனை மறுத்து வந்தாலும் பல நேரங்களில் அதிமுகவுக்கு பாஜக நெருக்கடி கொடுத்தது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
உதாரணத்திற்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ்ஐ பதவி நீக்கம் செய்ததும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை காப்பாற்றியதும் பாஜக தான் என அவரே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரது நடவடிக்கைகளிலும் பாஜகவின் ஆதரவு, எதிர்ப்பு இருந்ததை அவர்களே ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

எடப்பாடி டெல்லி பயணம்
இந்த நிலையில் அதிமுக தலைவர்கள் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியையும் அமித்ஷாவையும் சந்தித்து வருவது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.
எடப்பாடி அமித்ஷா சந்திப்பு
நேற்று துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிலையில், தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார் எடப்பாடி. அதில் அதிமுக விவகாரங்கள், திமுகவின் கூட்டணி, 2026 தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் ஆகியோர் குறித்தும் எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
பசும்பொன் தேவர் பாரத ரத்னா
ஆனால் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி அமித்ஷா சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக பல்வேறு யூகங்களும் சிறகடித்துப் பறந்தன. இந்த நிலையில் எதற்காக எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்தார் என்பது குறித்து அவரே விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும், மதுரை விமான நிலையத்திற்கு அவர் பெயரைச் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி
அவரது இந்த பேச்சுக்கு ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் வரவேற்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அதிமுக எம்பிக்களுடன் கடிதத்தை வழங்கியதாகவும், இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக பேசத்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டார் எனவும், பொதுவெளிக்குக் காட்டுவதற்காகவே தேவர் பெயரை அவர் பயன்படுத்தியதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications