டாக்டர் வி. சாந்தா மறைவுக்கு இபிஎஸ், ஒபிஎஸ் இரங்கல் - அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உத்தரவு

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை டாக்டர் சாந்தா மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மருத்துவர் வி.சாந்தா அவர்களின் புகழுக்கு பெருமைசேர்க்கும் வகையிலும், அவரது தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா வயது முதிர்வு காரணமாக இன்று காலையில் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சாந்தாவின் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 EPS, OPS condolence for DR V. Santhas death

மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " மருத்துவர் சாந்தாவின் மறைவு மருத்துவ துறைக்கும், தமிழகத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும் அவரது சிகிச்சை முறைகள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும். என்று பதிவிட்டுள்ளார்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.சாந்தா அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இவர் தனது வாழ்நாள் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விலையில்லாமலும், குறைந்த செலவிலும் மருத்துவசேவை ஆற்றியவர்.

தனது தன்னலமற்ற சேவைகளுக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ள டாக்டர் வி.சாந்தா அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மருத்துவர் வி.சாந்தா அவர்களின் புகழுக்கு பெருமைசேர்க்கும் வகையிலும், அவரது தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்றும் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதே போல துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சிறந்த சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் இன்று உடல் நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகள் வென்றுள்ள இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க தன்னலமின்றி அர்ப்பணிப்போடு பணியாற்றியதால் மாண்புமிகு அம்மா அவர்கள் உட்பட அனைவரது பாராட்டுக்களையும் பெற்றவர்.அவரது மறைவு புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

65 ஆண்டுகளுக்கு மேலாக தனது ஓய்வற்ற சமூக சேவையால் அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்ற டாக்டர் வி.சாந்தா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+