வேஸ்ட் லக்கேஜ்.. பாஜகவுக்கு ஆப்பு வைக்கும் எடப்பாடி! ’நெஞ்சில் குடியிருக்கும்’ கட்சியுடனா கூட்டணி?
சென்னை: 2026 தேர்தலுக்கு தயாராகும் வகையில் சுற்றுப்பயணத்தை அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் விஜய்யுடன் நடத்தி வந்த மறைமுக பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அக்கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றிவிட எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேமுதிக பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வர தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வேறொரு பிளானையும் எடப்பாடி பழனிச்சாமி கையில் எடுத்துள்ளதாக சொல்கின்றனர்.
தமிழக அரசியலில் காங்கிரஸ் - திமுக என்று இருந்த காலம் மாறி, திமுக அதிமுக என்ற நிலை தற்போது வரை தொடர்கிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக அதிமுகவே தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது. இதுவரை அதிமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்திருக்கிறது.
ஆனால் திமுகவோ ஒரு முறைக்கு மேல் ஆட்சி அமைத்ததில்லை. இந்த நிலையில் 2011, 2016 தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையில் வெற்றி பெற்ற அதிமுக, இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. அதற்கு பிறகு ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதற்குப் பிறகு நான்கரை ஆண்டு கால ஆட்சியையும் நிறைவு செய்தார். தொடர்ந்து 2021 தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. கட்சி தோல்வியடைய இரட்டை தலைமை தான் காரணம் என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் சொல்ல அதற்கு ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். ஆனால் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை கண்டது.
2019 நாடாளுமன்ற தேர்தல், நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் 2026-ல் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி காய் நகர்த்தி வருகிறார். அதற்கு கூட்டணி பலம் அவசியம் என்பதால் கடந்த காலங்களில் விலக்கி வைக்கப்பட்ட பாஜகவுடன் மீண்டும் கூட்டு சேர்ந்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் அழைத்து வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி அமைவது சாத்தியம் தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இது ஒரு புறம் இருக்க தமிழ்நாடு அரசியலில் புதிய வரவான விஜய் கட்சி பேசுபொருளாக மாறி இருக்கிறது. தனித்துப் போட்டி என்ற முடிவில் விஜய் உறுதியாக இருக்கிறார். அதே நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு விஜயை அழைத்து வரவேண்டும் என விரும்புகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இது தொடர்பாக மறைமுகமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் தொகுதி பேரம் மற்றும் துணை முதல்வர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி விஜய் இடையேயான பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாஜக, திமுகவுடன் கூட்டணியே கிடையாது நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார் விஜய்.
இந்த நிலையில் விஜய் உடன் கைகோர்க்க எடப்பாடி பழனிச்சாமி தயாராகி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அதிமுகவை பொறுத்தவரை தமிழகத்தில் 2026ல்ல் நிச்சயம் ஆட்சி அமைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தீர்மானமாக இருக்கிறார். அதே நேரத்தில் பாஜக உடனான கூட்டணி அந்த கட்சிக்கு பின்னடைவு தரும் என்பதை உணர்ந்து இருக்கிறார்.
அதே நேரத்தில் சில சீனியர்கள் தங்களுக்கு பிரச்சனை வரும் என்பதால் தான் பாஜகவை கூட்டணியில் சேர்க்க வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமியை வற்புறுத்தினர். இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனையில் திமுக, பாஜகவை எதிர்க்கும் போது நாம் ஏன் எதிர்க்கக் கூடாது? எதற்கு பயப்பட வேண்டும்? என்ன வந்தாலும் சந்திக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி நேரடியாகவே சொன்னாராம்.
இது ஒருபுறம் இருக்க அதிமுக பாஜக கூட்டணியை விட்டு வெளியே வர தயாராகி விட்டது. விஜயுடன் கூட்டணி சேர திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி இது தொடர்பாக எங்கள் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளோடும் கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி தொடர்பான அறிவிப்பு இறுதி செய்யப்பட்டு விடும்.
மேலும் பாஜகவுடன் கூட்டணி இருப்பதால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் மீண்டும் கால் பதிக்கலாம் என பேசி வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பாஜகவை கழட்டிவிட்டால் அதற்கு ஈடாக விஜய் தரப்பு வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கும். மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரனையும் வெளியேற்றிவிடலாம் என திட்டமிட்டு இருக்கிறார். இதை அடுத்து விஜயுடன் பேச்சுவார்த்தை தீவிர படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வரும் என்கின்றனர்.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications