எடப்பாடி தான் கிங்கு.. கடும் போட்டியிலும் சுமார் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் கடுமையான மும்முனைப் போட்டி நிலவிய நிலையிலும் கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் 3 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வியடைந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
திமுக vs அதிமுக vs தவெக என கடும் போட்டி நிலவியது. இதுபோக நாம் தமிழர் கட்சி, சசிகலா - ராமதாஸ் கூட்டணி என பல முனை போட்டி நிலவியது. கடும் போட்டியால் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தக் கடும் போட்டியிலும், பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அவர் 98 ஆயிரத்து 110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு 1 லட்சத்து 48 ஆயிரத்து 933 வாக்குகள் பெற்று, சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாரை விட 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அவரை தொடர்ந்து, சோழிங்கநல்லூர் தொகுதி தவெக வேட்பாளர் சரவணன் 96 ஆயிரத்து 780 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சரவணன் 2,20,382 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் எஸ்.அரவிந்த் ரமேஷை விட 96,780 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மாதவரம் தொகுதி தவெக வேட்பாளர் விஜய பிரபு 94 ஆயிரத்து 985 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளார். மாதவரம் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் எம்.எல்.விஜய்பிரபு 1,91,140 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனத்தை விட 94,968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல், பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் பிரகாசம் 72 ஆயிரத்து 740 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருப்பூர் தொகுதியில் போட்டியிட்ட சத்தியபாமா 69,992 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர், 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications