எடப்பாடி வீட்டில் விசில்.. பாடியே அசத்தும் எஸ்ஐ! “பணிச்சுமை” ஓவராம் - 32 வருட சர்வீஸ்.. கை சுத்தம்
சென்னை: முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணிக்காக நிற்கும் உதவி ஆய்வாளர் ஒருவர் பாட்டு பாடி விசில் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அவரவர்களின் நிலை மற்றும் அச்சுறுத்தலுக்கு ஏற்ப பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இப்படி பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு பொதுவாகவே மன அழுத்தம் அதிகம் இருக்கும்.

காவல் நிலைய பணி, வழக்கு என்று ஓடுவதை காட்டிலும் தலைவர்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் அமர்வதற்கு கூட ஒழுங்கான இடம் இருக்காது என்பார்கள். உயரதிகார்களை தவிர பலரும் நின்றுகொண்டே இருக்கும் நிலை உள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அடையாறில் உள்ள அவரது வீட்டு வெளியே ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் எப்போதும் ஈடுபட்டு இருப்பார்கள்.
அதுவும் கடந்த சில மாதங்களாக அதிமுகவில் ஏற்பட்டு இருக்கும் உட்கட்சிப் பூசல் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் காவலர்களுக்கும் சுமை அதிகரித்தபடி இருக்கிறது. இதுபோன்ற சூழல்களில் அவர்களுக்கு கடுமையான அழுத்தம் ஏற்படுவது இயல்பு.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டு வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் வசில் அடித்துக் கொண்டும் பாட்டுப்பாடிக் கொண்டும் இருப்பதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கின்றனர். இது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
அப்போது அந்த எஸ்.ஐ-யிடம் வீடியோ எடுத்த நபர் சிலர் கேள்விகளை முன்வைக்கிறார். அதற்கு பதிலளித்த அவர், "பணிச்சுமை எல்லாம் சொல்லி மாளாது. பாடல் பாடி என்னை நான் தேற்றுக்கொள்கிறேன். வேறு வழியே இல்லை." என்று கூறும் அவர், 'கிணற்றுக்குள் வாழும் தவளையை போலே, மனதுக்குள் வாழும் ஆசைகள் கோடி.' என்ற பாடலை அழகாக பாடிக் காட்டுகிறார். அடுத்து 'மன்னவனே அழலாமா' என்ற பாடல் ராகத்தில் அழகாக விசில் அடித்தார்.
அடுத்து பூமியிலே கற்பூர தீபம் என்ற பாடலை பாடி அசத்தினார். "நான் ரயில்வே பணியில் இருந்தபோது 3 மணிக்கு உடலை தூக்கி வர வேண்டும். அதான் பணிச்சுமை. இதற்கு காரணம் இந்த பெயர். 32 வருடத்தில் 100 ரூபாய் கூட சம்பாதிக்காமல் சம்பளத்தை நம்பியே வாழ்கிறேன். எல்லோரும் என்னை பெருமையாக பேசுவார்கள். அது எனக்கு சந்தோசம்." என்றார்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications