சென்னையில் மீண்டும் ‘ஷாக்’ சம்பவம்.. மேலும் பல "சார்"கள்.. திமுக அரசு மீது எடப்பாடி தாக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: “மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம், ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மேலும் சிலர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மகளிர் பிரிவில் 50 வயதான பெண் ஒருவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

chennai government hospital edappadi palaniswami

இந்த நிலையில், திடீரென அந்த பெண் தங்கி சிகிச்சை பெற்று வந்த அறைக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் மது போதையில் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக கத்தி கூச்சலிட்ட நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அந்த இளைஞரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அந்த இளைஞரின் பெயர் சதீஷ் குமார் என்று தெரியவந்துள்ளது. சிகிச்சைக்காக வந்த 50 வயது பெண்ணுக்கு மதுபோதையில் இளைஞர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் சென்னையில் உள்ள முக்கியமான் மருத்துவமனையில், பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தொடர்ந்து வரும் பாலியல் தொல்லை சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.

பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய மு.க.ஸ்டாலின் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? "யார் அந்த SIR" என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் இதுபோன்ற "சார்"கள் காப்பாற்றப்படுவதால் தான், மேலும் பல "சார்"கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+