போனால் போகட்டும் போங்கப்பா.. செங்கோட்டையனால் அதிராத அதிமுக! சைலண்டாய் சம்பவம் செய்யும் எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். தமிழக அரசியலில் இது பேசு பொருளாக மாறி இருந்தாலும், அதிமுகவுக்கு எந்தவித பின்னடைவையும் ஏற்படுத்தாது என்கின்றனர் அந்த கட்சியினர். இது ஒரு புறம் இருக்க 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணியை பலப்படுத்தும் வேலைகளை சத்தமின்றி செய்து வருகிறார் எடப்பாடி. பாமக உடன் பேச்சுவார்த்தை முடிந்து விட்ட நிலையில், அடுத்ததாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த, முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், இறுதியாக தவெக-வில் இணைந்து தனது அடுத்த அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவருக்கு முன்பே நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனிக்கட்சி முயற்சியில் தொடரும் நிலையில், தினகரனோ தனிக் கட்சியை தொடங்கியே விட்டார்.

இந்த மூவரின் தனித்தனி அரசியல் நகர்வுகள், அதிமுக-வின் வலிமையை பாதிக்குமா என்ற கேள்வி அதிகமாக விவாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், வெளியே நடக்கும் இந்த கலக்கங்களால் பாதிக்கப்படாமல், எடப்பாடி பழனிசாமி அமைதியாக தனது கூட்டணியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

edappadi palaniswami Sengottaiyan AIADMK

செங்கோட்டையன் வெளியேற்றம்

2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற மிகுந்த கவனத்துடன் அவர் அரசியல் நடவடிக்கைகளை நிதானமாக கட்டமைத்து வருகிறார் என்கின்றனர் நம்மிடம் பேசிய அதிமுகவினர். முதலில் பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்து அரசியல் அடித்தளம் அமைத்து வைத்த அவர், நம் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரப் போகின்றன என அவர் சொன்னபோதும், பெரிய கட்சிகள் எந்தவொன்றும் இதுவரை சேரவில்லை என்றே விமர்சகர்கள் கூறி வந்தனர்.

எடப்பாடி பழனிசாமி

ஆனால் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த ஃபார்வர்டு பிளாக் கட்சி தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்தது, பழனிசாமிக்கான ஒரு சிறிய ஆனால் முக்கியமான வெற்றியாகவே பார்க்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனும் கொங்கு மண்டலம் தொடர்புடைய சில சிறிய கட்சிகளுடன் தொடர்புகளை அதிகரித்து, கூட்டணியை விரிவாக்கும் பணியில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், கடந்த தேர்தலுக்கு முன்னர் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற தேமுதிக மற்றும் பாமக ஆகியவை மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர தயாராக உள்ளன என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தேமுதிக பேச்சுவார்த்தை

திமுக கூட்டணியில் இருந்து 25 தொகுதிகளும் 2 ராஜ்யசபா இடங்களும் கேட்ட தேமுதிகக்கு, திமுக எந்த விதத்திலும் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுவதால், தேமுதிக தற்போது மீண்டும் அதிமுகவை அணுகத் தொடங்கியிருக்கிறது. அதிமுகவும், 5 முதல் 10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் அளிக்கலாம் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. அதேபோல், பாமகவையும் அதிமுக-பாஜக கூட்டணியுடன் இணைக்க பாஜக மேலிடங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

பாமக பேச்சு

அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்து பேசிய பைஜயந்த் பாண்டா, பாமக கூட்டணியில் சேர்வதை உறுதிப்படுத்தியிருக்கிறார் எனவும், 20 முதல் 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கனவே தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் அதிமுக கூட்டணியில் இருக்கும் நிலையில், இப்போது பாமக மற்றும் தேமுதிக உள்ளே வரும் அறிகுறிகள் தெளிவாகத் தெரிகிறது.

கூட்டணி பலம்

மேலும், பட்டியலின மக்களுக்காக குரல் கொடுத்து வரும், தலைவர்களான டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோரை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக தீவிர முயற்சியில் உள்ளது. பட்டியலின மக்களிடம் அதிக செல்வாக்குள்ள தலைவர்களை இணைத்துக் கொண்டு 44 தனித்தொகுதிகளில் வெற்றி பெறும் திட்டத்தில் பாஜக இயங்கி வருகிறது. பழனிசாமியின் தலைவர் தலைமையில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஏற்கெனவே 39% வாக்குகள் உள்ளன எனக் கணிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி நடவடிக்கை

இந்த நிலையில், மேலும் 10% வாக்குகளை சேர்க்கும் நோக்கத்தில் எத்தனை கட்சிகள் இணைக்க முடிகிறதோ, அவற்றை அனைத்தையும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி நடைபெற்று வருகிறது. கட்சியை விட்டு சென்றவர்கள் இழந்தவர்கள் குறித்து கவலைப்படாது, புதிய கூட்டணியை மேம்படுத்தும் பணியில் முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் இந்த முயற்சிகள் பலனளிக்குமா என்பது அடுத்த ஆண்டு மே மாதத்தில் தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+