விஜய், அதிமுக, பாஜக கூட்டணி.. எடப்பாடி பழனிசாமியின் எண்ணம் அதுதான்.. ஜிகே வாசன் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்டிஏ கூட்டணியில் தவெகவை சேர்க்க வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக இருப்பதாக தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். பொது எதிரியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் விஜய் தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்றும், அப்படி நடந்தால் சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் உச்சத்தில் இருக்கிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருந்து வரும் நிலையில், புதிதாக தனியரசு, கருணாஸ், தமீமுன் அன்சாரி உள்ளிட்ட பலரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EPS - Vijay Alliance

அதேபோல் ஏப்ரல் மாதத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டணி அறிவிப்புக்கு பின் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அமமுக மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் வெளியேறி இருக்கின்றனர். பாமகவும் இரண்டாக உடைந்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் என்னென்ன கட்சிகள் இடம்பெறும் என்ற கேள்விகள் எழுந்தன.

இதுதொடர்பாக தொடர் விவாதமும் நடந்து வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணிக்குள் எப்படியாவது விஜய்யை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். கரூர் விவகாரத்திற்கு பின் தவெகவுக்கு வந்த சிக்கல் அத்தனையிலும் அதிமுக ஆதரவு கொடுத்தது. ஆனால் தவெக சிறப்பு பொதுக்குழுவில் தவெக தலைமையில் கூட்டணி என்று தீர்மானம் போடப்பட்டது.

இதன்பின் அதிமுகவினர் விஜய்யையும், தவெகவையும் அட்டாக் செய்ய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் என்டிஏ கூட்டணி தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜிகே வாசன் பேசியுள்ளார். அதில் ஜிகே வாசன் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெகவை சேர்க்க வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிகரித்து வருகின்றன. எனவே எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புக்ள்ளது. பொது எதிரியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் விஜய் கூட்டணிக்கு வர வேண்டும். அப்படி நடந்தால் 2026 சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதியான ஒன்று. திமுக வேண்டாம் என்று நினைக்கும் கட்சிகள் இணைந்து ஆட்சியை வீழ்த்தும் நிலை வரும் மாதங்களில் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+