15 லட்சம் மரங்களுக்கு சமம்.. ஸ்டாலினின் மாஸ்டர் பிளானுக்கு கிடைத்த வெற்றி.. MTC செய்த பெரும் சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) தினசரி பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் EV பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பேருந்துகள் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளன.

சென்னையில் கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட 625 மின்சாரப் பேருந்துகள், கடந்த 14 மாதங்களில் சுமார் 3 கோடி கிலோமீட்டர் தூரம் பயணித்து, 1 கோடி லிட்டருக்கும் அதிகமான டீசலை மிச்சப்படுத்தியுள்ளன. இதன் மூலம் சென்னையில் சுமார் 25,000 மெட்ரிக் டன் அளவுக்கு கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.

chennai

இந்த சாதனை, நகருக்குள் புதிதாக 15 லட்சம் மரங்களை நட்டு வளர்ப்பதற்கு இணையான பலனைத் தந்துள்ளதாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது சென்னையில் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த பேருந்துகள் சுற்றுசூழலை பெரிய அளவில் மாற்றி உள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரும் பாய்ச்சல்

ஒரு வழக்கமான டீசல் பேருந்து ஒரு கிலோமீட்டர் தூரப் பயணத்திற்கு சராசரியாக 750 முதல் 800 கிராம் வரையிலான கரியமில வாயுவை வெளியிடுகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகளைச் சுமந்து கொண்டு, தொடர்ச்சியாக இயங்கும் இந்த டீசல் வாகனங்களால் சென்னையின் முக்கிய சாலைகளில் நைட்ரஜன் டை ஆக்சைடு மாசும் மற்ற மாசுபாடுகளும் அதிகரித்தன.

தற்போது இயங்கி வரும் 625 மின்சாரப் பேருந்துகள் மூலம் நச்சு வாயுக்கள் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பழைய மகாபலிபுரம் சாலை (OMR) போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் காற்று மாசு குறைந்து, காற்றின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

திட்டத்தின் பின்னணி

உலக வங்கியின் நிதியுதவியுடன் சுமார் ₹697 கோடி மதிப்பீட்டில் முதல் கட்டமாக இந்த 625 மின்சாரப் பேருந்துகள் கடந்த ஆட்சியில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. இதில் 400 சாதாரணடீலக்ஸ் பேருந்துகளும், 225 குளிரூட்டப்பட்ட தாழ்தளப் பேருந்துகளும் அடங்கும்.

வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை-I மற்றும் குரோம்பேட்டை மத்திய பணிமனை ஆகிய 5 முக்கிய இடங்களில் அதிநவீன மின்சார சார்ஜிங் வசதிகளுடன் கூடிய சிறப்புப் பணிமனைகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இவை Gross Cost Contract முறையில் ஸ்விட்ச் மொபிலிட்நிறுவனத்துடன் இணைந்து இயக்கப்படுகின்றன. பேருந்துகளைப் பராமரிப்பது, சார்ஜ் செய்வது மற்றும் ஓட்டுநர்களை நியமிப்பது போன்ற பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. வழித்தடத் திட்டம், கட்டணம் நிர்ணயம் மற்றும் நடத்துநர் பணிகளை MTC நிர்வகிக்கிறது.

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறும் வகையிலான தாழ்தள வசதி. சக்கர நாற்காலி சாய்தளங்கள், சிசிடிவி கேமராக்கள், தானியங்கி அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட வசதிகள் பயணிகளுக்குப் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குகின்றன.

கடந்த காலங்களில் டீசல் விலை உயர்வு மற்றும் உதிரிபாகப் பராமரிப்புச் செலவுகளால் நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்த சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு, இந்த மின்சாரப் பேருந்துகள் மிகப்பெரிய நிதி நிர்வாகத்தை தந்துள்ளன. 14 மாதங்களில் 1 கோடி லிட்டர் டீசல் மிச்சப்படுத்தப்பட்டதன் மூலம் நேரடியாகப் பல நூறு கோடி ரூபாய் எரிபொருள் செலவு குறைந்துள்ளது. மின்சார மோட்டார்கள் குறைந்த பாகங்களைக் கொண்டவை என்பதால், அடிக்கடி ஏற்படும் பழுது மற்றும் பராமரிப்பு நேரமும் பெருமளவு குறைந்துள்ளது.

625 மின்சார பேருந்துகளின் வெற்றிகரமான இயக்கத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு பொதுப் போக்குவரத்தை முழுமையாக மின்மயமாக்கும் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. தமிழக பட்ஜெட்டில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்காகக் கூடுதலாக 1,000 புதிய ஏசி மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழைய டீசல் பேருந்துகளைப் படிப்படியாக அகற்றிவிட்டு, சென்னை பெருநகரப் பகுதியில் மட்டும் மொத்தம் 3,000 ஏசி மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான விரிவான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+