பாஜக எம்எல்ஏ மருமகன்.. ரூ.583 கோடிகளின் அதிபதி.. ஈரோடில் அதிமுக ஆற்றல் அசோக்குமார் தோல்வி
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடியாகும். பாஜக எம்எல்ஏ சிஆர் சரஸ்வதியின் மருமகனாகிய ஆற்றல் அசோக்குமார், ஈரோடு தொகுதியில் ஆரம்பத்தில் முன்னிலை வகித்த நிலையில், நேரம் செல்ல செல்ல கடும் பின்னடைவை சந்தித்து, இறுதியில் தோல்வி அடைந்தார்.
ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, கொங்கு மண்டலத்தில் பல அரசியல்வாதிகள் மூக்கின் மேல் விரல் வைத்தனர். இவரையா எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக அறிவித்தார் என்று ஆச்சர்யத்துடனும் திகைப்புனுடம் பார்த்தார்கள்.. ஆனால் அதிமுகவினரே அசரடிக்கும் வகையில் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்தார். ஆனால் நேரம் செல்ல செல்ல நிலைமை மாறியது.

அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் குடும்பம் பாஜக பாரம்பரிய குடும்பம் ஆகும். அவரது அத்தையான டாக்டர் சிஆர் சரஸ்வதி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். வெறும் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் ஆற்றல் அசோக்குமார் அதிமுகவில் இணைந்தார். அப்படிப்பட்டவரை ஈரோடு தொகுதி வேட்பாளராக எடப்பாடி அறிவித்த போது திகைப்பு எழுந்தது.
ஆற்றல் அசோக்குமாரின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமம் ஆகும்.. அசோக்குமாரின் தந்தை கணித பேராசிரியர். தாய் தமிழ் பேராசிரியர்.. ஆற்றல் அசோக்குமார் சொந்த ஊரிலேயே அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்..
அதன்பின்னர் 1987ம் ஆண்டு கோவையில் உள்ள தொழில் நுட்ப கல்லூரியில் மின் பொறியியல் பட்டம் பெற்றார். அதன்பின்னர் அமெரிக்கா சென்ற ஆற்றல் அசோக்குமார் அங்கு உள்ள பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் முதுகலைப்பட்டம் பெற்றதுடன், கணிணி பொறியியல் பட்டமும் பெற்றார்.
அசோக்குமார் கடந்த 1992 முதல் 2005 வரை மைக்ரோசாப்ட், இன்டெல் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றினார். அதன்பின்னர் சொந்த ஊர் திரும்பிய அசோக்குமார், தன் தாய் தந்தையை போல் பெரிய கல்வியாளராக உருவெடுக்க விரும்பினார். அதற்காக கல்வி நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார்... இவர் தற்போது டிப்ஸ் கலை அறிவியல் கல்லூரி, டிப்ஸ் குளோபல் இன்ஸ்டிடியூட், தி இந்தியன் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்..
இவர் கொரோனா காலத்திற்கு பின்பு முழுமையாக ஆற்றல் என்ற தொண்டு நிறுவனம் தொடங்கி பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்கள். சீர்குலைந்த அரசு பள்ளிகளை அரசின் அனுமதி பெற்று மேம்படுத்த தொடங்கினார். இதுவரை 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை அசோக்குமார் புணரமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஆற்றல் அறக்கட்டளை மூலம் 10 ரூபாய்க்கு உணவு, 10 ரூபாய் மருத்துவம் போன்ற சேவைகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் ஈரோடு லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் கடந்த மார்ச் மாதம் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவரது வேட்பு மனுவில் சொத்து மதிப்பு எவ்வளவு, நகைகள் எவ்வளவு உள்ளது. அசையும் சொத்து மதிப்பு எவ்வளவு, அசையா சொத்து மதிப்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட தகவல்கள் அப்போது வெளியாகி இருந்தது. இதன்படி ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி என்று கூறப்பட்டது.
வங்கி கணக்கில் சுமார் ரூ.7 கோடி இருப்பதாகவும், அசையும் சொத்து - ரூ.526.53 கோடி என்றும் அசையா சொத்து - ரூ.56.95 கோடி என்றும் கூறப்படுகிறது. ஆற்றல் அசோக் குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது என்றும் ஆற்றல் அசோக் குமாரின் மனைவி கருணாம்பிகையின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி என்றும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் பெயரிலும், வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஈரோடு லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ள ஆற்றல் அசோக்குமார் தபால் வாக்கில் முன்னிலை வகிப்பதாகவும், திமுக வேட்பாளர் பிரகாஷ் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் நேரம் செல்ல செல்ல நிலைமை மாறியது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஈரோடு லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 2,36,566 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் பிரகாஷ் 562339 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 325773 வாக்குகள் வாக்குகள் பெற்றுள்ளார். 3வது இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் 82796 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கிய தமாகா வேட்பாளர் விஜயகுமார் 77911 வாக்குகள் பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications