Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டுக்கு ஸ்வீட் நியூஸ்.. ஈரோடு, மதுரை, சேலம்.. மொத்தம் 34 ரயில்கள்.. தென்னக ரயில்வே சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை மறுநாள் அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் கோவில், 54,700 சதுர அடி பரப்பளவிலும், 360 அடி நீளத்திலும், 235 அடி அகலத்திலும், தரையில் இருந்து 16.5 அடி உயரத்திலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நம்முடைய பின் இந்தியாவில் கட்டப்படும் மிகப் பிரம்மாண்டமான முதல் திருக்கோயில் இதுதான் என்பது கூடுதல் பெருமையாகும்.

சிறப்பு அழைப்பு: நாளை மறுநாள் அயோத்தியில் நடக்க போகும் கும்பாபிஷே நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள் மற்றும் இந்தியா முழுவதுமுள்ள விவிஐபிக்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.. இதில் பங்கேற்க நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் 8000 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Erode, Madurai and 34 special trains run from tamil nadu to ayodhya, Southern Railways Important announcement

மேலும், நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு வருவதற்கு வசதியாக அயோத்தியில் விமான நிலையம் அமைக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டும் வருகின்றன... அயோத்தி ரயில்வே ஸ்டேஷன், பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு பயணிகளின் வருகைக்காக ரெடியாகி உள்ளது.. இதுபோலவே, பல்வேறு நகரங்களில் இருந்து விமானங்களும், ரயில்களும் அயோத்திக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

தெற்கு ரயில்வே: அந்த வகையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது... அதுபோலவே, தமிழகத்திலிருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் விட தெற்கு ரயில்வே முடிவு செய்திருக்கிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு, 100 ரயில் சேவைகளை இயக்க முடியும். அதனால் அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு திருநெல்வேலி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு, 34 சிறப்பு ரயில்களை இயக்க, ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது.

விரைவில் வெளியீடு: இந்த சிறப்பு ரயில்களுக்கு குறைந்த கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், வரும் ஜனவரி 29-ம் தேதி முதல் பிப்ரவரி 29-ம் தேதி வரை இயக்கப்படும். இது குறித்த அட்டவணை விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+