இரவோடு இரவாக "அழுத்தம்".. விஜய் வர்றதுக்கு முன்னாடியே திருச்சி ஸ்டார் ஓட்டல்களுக்கு பறந்த உத்தரவு?
சென்னை: தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் வரும் 20ம் தேதி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், 27ம் தேதி திருவள்ளூர், வட சென்னை பகுதிகளிலும், அக்டோபர் 4, 5 தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால், இனி நடக்க போகும் விஜய்யின் கூட்டங்களுக்கு அனுமதி கிடைக்குமா? என்பது சந்தேகம்தான் என்று பத்திரிகையாளர் மணி கூறுகிறார்.
Arasiyal Kalam என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "விஜய்யின் அரசியல் வருகையானது, ஒட்டுமொத்த அரசியல் எந்திரமும் கதிகலங்கி போயிருக்கிறது.. இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவானது, அன்றைய தினம் இரவு 8 மணியுடன் முடிப்பதாக திட்டம். ஆனால், 9,.30 மணிவரை இழுத்தடிக்கப்பட்டது..

இதற்கான காரணம் என்னவென்பது, அதிகாரிகளுக்கும், மீடியாவில் உள்ளவர்களுக்கும் தெரியும்.. விஜய் அன்று அரியலூரில் பிரச்சாரத்தை துவங்கவில்லை..
இரவு விஜய் பேசி முடித்தபிறகுதான், முதல்வர் இங்கே தன்னுடைய பேச்சை துவங்குகிறார்.. அரசு தீர்மானித்திருந்த நேரத்தையும் மாற்றுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? விஜய் பேச்சுக்கு மீடியா முக்கியத்துவம் தந்துவிடும் என்ற பதைபதைப்பில் இதெல்லாம் நடக்கிறது. எத்தனை நாளைக்கு இந்த பூச்சு வேலை நடக்கும்?
விடிவுகாலம் வராது
விஜய் மாதிரி ஒரு கேரக்டர் எப்படி தமிழக அரசியலில் உதிக்க முடிகிறது? இவர்கள் நியாயமாக இருந்திருந்தால், மக்கள் தந்த தீர்ப்பை மதித்து, நேர்மையான முறையில் அரசு செயல்பட்டிருந்தால், விஜய் ஏன் வரப்போகிறார்? அப்படியே வந்திருந்தாலும், அதில் பலனும் இருந்திருக்காது.. எனவே கோளாறு இவர்களிடம்தான் உள்ளது.. இதை புரிந்துகொள்ளாதவரை, விடிவுகாலமும் வராது..
விஜய்யை தொடர்ச்சியாக இழிவுபடுத்துவதிலும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதிலும்தான் இனி அரசின் கவனம் இருக்கும்..
50 வருட திமுக சாதனை
அதேபோல கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதிர்க்கட்சியே காணவில்லை.. எப்போதுமே ஒருவருக்கு வியாதி வந்துவிட்டால், அந்த வியாதியைதான் குணப்படுத்த வேண்டுமே தவிர, வியாதிக்கான அறிகுறிகளில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறது..
அதேபோல 76 ஆண்டு கால வரலாற்றில், பல இடர்பாடுகளை, போராட்டங்களை சந்தித்துதான் திமுக வளர்ந்துள்ளது.. எனவே, சிறந்த எதிர்க்கட்சியாக எப்படி செவேண்டும் என்பதை திமுகவிடமிருந்து விஜய் கற்றுக் கொள்ள வேண்டும்.. 50 வருட காலம் எதிர்க்கட்சியாக இருந்துள்ளதால், திமுகவிடமிருந்து விஜய் கற்றுக் கொள்ள வேண்டும்..
மயிலாடுதுறை தவெக கூட்டம்
ஆனால், விஜய் மீது நிறைய தாக்குதல்களை திமுக தொடுக்கும்.. விஜய்யின் அடுத்தடுத்த கூட்டங்களுக்கு அனுமதி கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்,.
திருச்சிக்கு பிறகு மயிலாடுதுறையில் கூட்டம் நடத்த போகிறார் விஜய்.. எனவே மாவட்ட நிர்வாகமே அதற்கு அனுமதி மறுக்கும் அல்லது வேறு யாராவது விஜய் கூட்டத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போகலாம்..
அதுமட்டுமல்ல, விஜய்யின் திருச்சி கூட்டத்தின்போதே, ஏர்போர்ட் போக முடியாமல், அலுவலகம் போக முடியாமல் பொதுமக்கள் நிறைய சிரமத்தை எதிர்கொண்டனர்.. எனவே விஜய்க்கு கூட்டம் கூடுவதும் சிக்கல்தான்.. இதனை விஜய் எப்படி எதிர்கொள்ள போகிறார் தெரியவில்லை.
இரவோடு இரவாக வந்த அழுத்தம்
காரணம், திருச்சி கூட்டத்திற்கு முன்தினம் இரவே, விஜய் திருச்சியில் சென்று தங்குவதாக இருந்தது.. ஆனால், எந்த நட்சத்திர ஓட்டல்களிலும் விஜய் தங்கிவிடக்கூடாது என்று கெடுபிடிகள் செய்யப்பட்டுள்ளன.. விஜய் தங்கினால் கட்சிக்காரர்கள் ஓட்டலையே அலம்பல் செய்துவிடுவார்கள், எனவே விஜய்க்கு ஸ்டார் ஓட்டலில் யாரும் ரூம் தரக்கூடாது என்று ஓட்டல் அதிபர்களுக்கு அழுத்தங்கள் தரப்பட்டதாக தரப்பட்டுள்ளது..
எனவே முதல் இரவே விஜய் தங்க வேண்டியது முடியாமல் போய்விட்டது.. சரியான ஓட்டல் கிடைக்காததால், மறுநாள் காலையில் ஸ்பெஷல் ஃபிளைட்டில் சென்றிருக்கிறார்.. அதனால்தான், ஏர்போர்ட்டிலிருந்து அவரால் 6 கிமீ தூரத்துக்கு எளிதாக வர முடியவில்லை..
வழக்கமாக ஏர்போர்ட்டிலிருந்து 6 கிமீ தூரம் வருவதற்கு அதிகபட்சம் அரை மணி நேரம் ஆகும்.. ஆனால், விஜய்க்கு 5 மணி நேரமாகியிருக்கிறது..
கோர்ட்டுக்கு போவாங்க
முதல்நாளே எந்த கெடுபிடியும் செய்யாமல், விஜய்யை திருச்சி ஓட்டல்களில் எங்காவது தங்க விட்டிருந்தால், இந்த கூட்டம் சேர்ந்திருக்காது.. எனவே அரசுதான் தன்னுடைய தலையில் சூனியம் வைத்து கொண்டது.. இப்போது அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு விஜய் செல்லும்போதெல்லாம் கூட்ட நெரிசலால் சிக்கல் வரும்.. எனவே விஜய் கூட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று கோரி யாராவது நிச்சயம் நீதிமன்றம் செல்வார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?










Click it and Unblock the Notifications