சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்தில் போட்டி!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    சென்னை: கொங்குநாடு மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்: தி.மு.க. உடன் ஒப்பந்தம் கையெழுத்து!

    திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகளும், மதிமுகவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

     Eswarans party gets 3 assembly seats

    இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

    கொமதேக உடன் நடைபற்ற இரண்டுக்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனிடையே கொமதேக, அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியான நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.

    இந்நிலையில் திமுக - கொமதேக கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தற்போது சுமுகமாக முடிந்துள்ளது. திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

    English summary
    Eswaran's party gets 3 assembly seats in DMK alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X