Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லைஃப் லைன் வேணும்.. சட்டென கேட்ட உதயநிதி.. 10 வருஷமா எதுவும் மாறவில்லை.. கலகலத்த கிருத்திகா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி மற்றும் அவரின் மனைவி இயக்குனர் கிருத்திகா உதயநிதி இருவரும் ட்விட்டரில் உரையாடிய பழைய கான்வோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி. இவர் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் இவர் இயக்கிய பேப்பர் ராக்கெட் என்ற வலைத்தொடரை இவர் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இந்த தொடர் விமர்சகர்கள் இடையே பெரிய அளவில் கவனம் பெற்றது. இன்னொரு பக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கலகத் தலைவன்' படம் வரும் 18ம் தேதி வெளியாக உள்ளது. அதேபோல் படம் வெளியிடுவதில் உதயநிதி ஸ்டாலின் பிஸியாக இருக்கிறார்.

 ரெட் ஜெயண்ட்

ரெட் ஜெயண்ட்

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக இவர் பல்வேறு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட லவ் டுடே படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் கிருத்திகா உதயநிதி இருவரும் ட்விட்டரில் மேற்கொண்ட உரையாடல் ஒன்று வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக இருவரும் ஜாலியாக அடிக்கடி உரையாடுவார்கள்.

உரையாடல்

உரையாடல்

முக்கியமாக இவர்களின் காதல் கதை குறித்து அடிக்கடி காமெடியாக உரையாடுவார்கள். அந்த வகையில் கிருத்திகா உதயநிதி - உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட அந்த உரையாடல்தான் வைரலாகி வருகிறது. 10 வருடங்களுக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் நான் நெட்டிசன்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க போகிறேன். கேள்வி கேட்க விரும்பும் நபர்கள் கேள்வி கேட்கலாம். அடுத்த 15 நிமிடத்திற்கு கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

கிருத்திகா உதயநிதி

கிருத்திகா உதயநிதி

இதற்கு கிருத்திகா உதயநிதி அளித்த பதில்தான் வைரலாகி வருகிறது. அதில், உங்களுக்கு என்ன டின்னர் சமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். இதற்கு உதயநிதி ஸ்டாலின். ரொம்ப கஷ்டமான கேள்வி இது. என்ன சொல்வது.. லைப் லைன் ஆப்ஷன் இருக்கா என்று கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த கிருத்திகா உதயநிதி.. எஸ். இருக்கிறது.. ஆப்ஷன் (ஏ) தோசை, ஆப்ஷன் (பி) தோசை, ஆப்ஷன் (சி) தோசை, ஆப்ஷன் (டி) தோசை, என்று பதில் அளித்துள்ளார்.

என்ன பேசினார்கள்

என்ன பேசினார்கள்

இந்த கான்வோ அப்போது வைரல் ஆனது. இதைத்தான் தற்போது மீண்டும் கிருத்திகா உதயநிதி பகிர்ந்து உள்ளார். அதில் 10 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் எதுவும் மாறவில்லை. இப்போதும் அதே ஆப்ஷன்தான் என்று குறிப்பிட்டு உள்ளார். நெட்டிசன்கள் பலர் இந்த போஸ்டை ஷேர் செய்து வருகின்றனர். இருவரும் நல்ல தம்பதிகள் என்று நெட்டிசன்கள் இதில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+