இப்படியே போனால்.. சரிப்பட்டு வராது.. அமைச்சரவையை மாற்றும் ஸ்டாலின்? உள்ளே வரும் புதிய முகங்கள்?
சென்னை: 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் திமுகவில் சில அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் இருக்கும். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றம் இருக்கும், என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரியுடன் சேர்த்து 40 இடங்களில் வென்றுள்ளது. பாஜக, அதிமுக ஒரு இடங்களில் கூட வென்றது இல்லை. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் திமுகவில் இளம் ரத்தத்தை பாய்ச்சல் அந்த கட்சி முடிவு செய்துள்ளதாம் . முக்கியமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கியமான லிஸ்ட் ஒன்றை எடுத்து வருகிறாராம்.
திமுகவில் சில அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
1. அதன்படி லோக்சபா தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறாராம். அதேபோல் வேலை பார்க்காத இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறாராம்.
2. நன்றாக பணியாற்றிய இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை வைத்து அவர்களுக்கு ப்ரமோஷன் கொடுக்க உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அதன்படி புதிதாக இவர்களில் சிலரை மாவட்ட செயலாளர்களாக களமிறக்க உதயநிதி ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
3. அதேபோல் அமைச்சர்களாக பணியாற்றாதவர்கள், சரியாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்கள் லிஸ்டையும் எடுத்துள்ளார். இந்த லிஸ்டை வைத்து அதிலும் சில மாற்றங்களை செய்ய உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் ப்ரோமோஷன்: உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தலுக்கு பின் ப்ரோமோஷன் கொடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். அதன்படி அமைச்சர் பதவியில் இருந்து துணை முதல்வர் பதவியை உதயநிதிக்கு கொடுக்க ஸ்டாலின் திட்டங்களை வகுத்து வருகிறாராம்.
லோக்சபா தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து திமுக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தலுக்கு பின் ப்ரோமோஷன் கொடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.
பெரும்பாலும் அடுத்த சில நாட்களில் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.
அமைச்சரவை மாற்றம்: இந்த நிலையில் திமுகவில் பின்வரும் மாற்றங்கள் தேர்தல் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. அமைச்சரவை மாற்றம் இருக்கும். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றம் இருக்கும்.
2. புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
3. பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications