இரவு முழுக்க வெளுத்த மழை.. அதிகாலையில் சட்டென வடிந்த தண்ணீர்.. சென்னையில் "மேஜிக்".. நிலைமை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இரவு முழுக்க மழை பெய்தும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. சென்னை நகரின் பிரதான சாலைகளில் வேகமாக வெள்ளம் வடிந்துள்ளது.

பொதுவாக சென்னையில் 1 மணி நேரம் மழை பெய்தாலே சாலை வெள்ளக்காடு போல காட்சி அளிக்கும். மெரினா பீச் நடந்து வந்து சிட்டிக்கு உள்ளே டென்ட் போட்டது போல வெள்ளக்காடாக காட்சி அளிக்கும்.

முக்கியமாக வடகிழக்கு பருவமழை தொடங்கினால் தினசரி சாலைகளில் வெள்ளத்தை பார்க்க முடியும். அதிலும் டிசம்பர் மாதங்களில் சாலைகளில் ஸ்விம்மிங் அடிக்கும் நிலை ஒவ்வொரு வருடமும் ஏற்பட்டு வந்தது.

மழை

மழை

கடந்த வருடமும் சென்னையில் சாலைகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. டிசம்பர் மாதம் கடந்த வருடம் மழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து சென்னையில் வெள்ள நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதாவது சாலைகளின் ஓரம் வெள்ள நீர் வெளியேறுவதற்காக மிகப்பெரிய அளவில் குழாய்கள் அமைக்கப்படும். ஆறுகளில் கலக்கும் வகையில் சென்னை முழுக்க இதற்காக குழாய்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பணிகள்

பணிகள்

இதற்கான பணிகள் கடந்த 4-5 மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த முறை வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.கிட்டத்தட்ட இதற்காக சென்னையில் எல்லா சாலைகளிலும் குழி தோண்டப்பட்டது. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வந்தனர். இது மக்களுக்கு கடுமையான இடைஞ்சல்களை ஏற்படுத்தியது. இருந்தாலும் மழை வெள்ளத்தை தடுக்கும் என்பதால் தொடர்ந்து பணிகள் நடந்தன.

 வெள்ளம் இல்லை

வெள்ளம் இல்லை

பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர். பருவமழை நெருங்கி வருவதால் இந்த பணிகள் வேகமாக செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில்தான் மழை காரணமாக சென்னையில் பல சாலைகளில் வெள்ளம் ஏற்படாமல் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் மழை பெய்த போது வெள்ளம் வேகமாக வடிகிறதா என்று சோதனை செய்யப்பட்டது. அதன்படியே வேகமாக வடிந்தது.

பணிகள்

பணிகள்

அப்போது சென்னையில் 90 சதவிகித பணிகள் முடிந்து இருந்தன. இந்த நிலையில்தான் நேற்று இரவு மழை பெய்த மழை காரணமாக சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனே வடிந்து உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.

தண்ணீர் வடிந்தது

தண்ணீர் வடிந்தது

பிரதான சாலைகள் எதிலும் சென்னையில் தற்போது வெள்ளம் இல்லை. பொதுவாக சென்னையில் மழை பெய்தால் சப் வேக்களில் தண்ணீர் தேங்கும். ஆனால் சென்னையில் முக்கியமான 15 சப் வேக்களில் தண்ணீர் தேங்கவில்லை. உடனே இங்கிருந்து தண்ணீர் வெளியேறி உள்ளது. அதிகபட்சம் 15 நிமிடத்தில் தேங்கிய தண்ணீர் எல்லாம் வடிந்துவிட்டது. இரவு முழுக்க மழை பெய்தும் கூட அதிக அளவு தண்ணீர் தேங்கவில்லை. மழை நீர் வடிகால் வசதி காரணமாக இப்படி தண்ணீர் வேகமாக வடிகிறது.

மேஜிக்

மேஜிக்

இன்னும் சிலஏரியாக்களில் பணிகள் முழுமையாக முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக கே.கே நகர் போன்ற பகுதிகளில் இன்னும் பணிகள் முடியாமல் உள்ளன. இது போன்ற பகுதிகளில் மட்டும் வெள்ளம் வடியாமல் உள்ளது. இது போன்ற பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல் ஓஎம்ஆர் பகுதியில் இன்னும் முழுமையாக பணிகள் முடியவில்லை. அதனால் அங்கும் லேசாக ஆங்காங்கே வெள்ளம் தேங்கி உள்ளது/.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+