காம்பினேஷன் சரியில்லையே.. செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததை கூகுள் கூட ஏற்க மறுக்குதே.. இதை பாருங்க
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் செங்கோட்டையன் சேர்ந்துள்ள நிலையில் அதை கூகுள் கூட இந்த நொடி வரை ஏற்காமல் இருப்பது வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் இன்று தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இன்று தவெகவில் இணையும் முன் நேற்று இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கூகுளில் குழப்பம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் செங்கோட்டையன் சேர்ந்துள்ள நிலையில் அதை கூகுள் கூட இந்த நொடி வரை ஏற்காமல் இருப்பது வைரலாகி வருகிறது. அதாவது செங்கோட்டையன் தவெக என்று சர்ச் செய்தால் கூகுள் அதை உடனே செங்கோட்டையன் அதிமுக என்று மாற்றி பதில் தருகிறது. Did you mean செங்கோட்டையன் அதிமுக? ஆ என்று கேள்வி எழுப்பி அதன்பின்பே பதில்களை தருகிறது. அதாவது கூகுள் டேட்டா பேஸில் கூட அது செங்கோட்டையன் அதிமுக என்றே காட்ட முனைகிறது.
அதுவே ஸ்டாலின் அதிமுக என்று போட்டால் அல்லது எடப்பாடி பழனிச்சாமி திமுக என்று மாற்று கட்சியோடு சேர்த்து போட்டால் கூட கூகுள் அதை மாற்றி பதில் சொல்வது கிடையாது. செங்கோட்டையன் அதிமுகதான் சரியான காம்பினேஷன் என்று கூகுள் நினைக்கிறது என்பது போல கூகுள் பதில் அளித்துள்ளது. செங்கோட்டையன் சேருவது பர்கருக்கு தேங்காய் சட்னி வைப்பதை போல காம்பினேஷன் என்று கூகுள் நினைக்கிறது என்பது போல கூகுள் பதில் அளித்துள்ளது.
செங்கோட்டையன் நீக்கம் ஏன்?
அதிமுகவில் 50 ஆண்டுகால அரசியல் செய்தவர் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவின் அடிமட்ட உறுப்பினராக இருந்து வளர்ந்தவர் செங்கோட்டையன். இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும் என அவர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு விதித்தார்.

அதிமுக செங்கோட்டையன்
கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, 2009 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் எடப்பாடி பழனிசாமியே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை செங்கோட்டையன் ஆவேசமாக சுட்டிக்காட்டினார். தனது காலக்கெடு குறித்து விளக்கமளித்த அவர், "பத்து நாட்களுக்குள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால், அவர்களுடன் இணைந்து கட்சியை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபடுவேன்" என்று அறிவித்தார்.
மேலும், "தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டுமே இனி எடப்பாடி பழனிசாமியுடன் பரப்புரைகளில் பங்கேற்பேன்" என கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார். "அனைவரையும் ஒன்றிணைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். இதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர்ந்துகொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்
ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு வளைந்து கொடுக்கவில்லை. இதையடுத்து தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன் ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications