திருடனுக்கு தேள் கொட்டிய நிலை! பாகிஸ்தானே நினைத்தாலும் இந்தியாவை தாக்க முடியாது! மோடி ராஜதந்திர செக்
டெல்லி: பாகிஸ்தானில் இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலுக்கு அந்நாடு கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஆனால் பாகிஸ்தானே நினைத்தாலும்.. இந்தியாவை தாக்க முடியாது.. ஆம் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு பெரிய செக் ஒன்றை வைத்துள்ளது இந்தியா!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிக்கையில் இந்தியாவை கடுமையாக தாக்கி உள்ளார். பாகிஸ்தானில் 5 இடங்களில் கோழைத்தனமான தாக்குதல்களை எதிரிகள் நடத்தி உள்ளனர். போர் நடவடிக்கைக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமையும் உள்ளது.
பலமான பதிலடி கொடுக்கப்படும். முழு தேசமும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளுடன் நிற்கிறது. பாகிஸ்தான் ஆயுதப்படைக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். மேலும் முழு பாகிஸ்தான் நாட்டின் மன உறுதியும் உங்களுடன் உள்ளது. இந்தியாவை எப்படி சமாளிப்பது எப்படி பதிலடி தருவது என்று தெரியும். பாகிஸ்தான் தேசத்திற்கும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கும் எதிரியை எவ்வாறு கையாள்வது என்பது தெரியும். எதிரி அவர்களின் தீய இலக்குகளில் வெற்றிபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அவர்களின் நோக்கங்களை வெல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் அறிவிப்பால் இரண்டு நாடுகளுக்கு இடையே அதிகாரபூர்வ போர் தொடங்கிவிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா வைத்த செக்
ஆனால் பாகிஸ்தானே நினைத்தாலும்.. இந்தியாவை தாக்க முடியாது.. ஆம் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு பெரிய செக் ஒன்றை வைத்துள்ளது இந்தியா.. அது என்ன செக் என்று பார்க்கலாம்!
1. இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன. இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவில்லை.
2. இப்போது பாகிஸ்தான் திருப்பி அடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.. இந்தியாவில் பாகிஸ்தான் எங்கே தாக்கும்? இந்திய ராணுவ தளவாடங்களை தாக்க முடியாது. தாக்கினால் அது போர் ஆக மாறும்.
3. இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவில்லை. அதனால் பாகிஸ்தானும் இந்திய ராணுவ தளவாடங்களை தாக்க முடியாது.
4. சரி.. நாம் தாக்கியது போல தீவிரவாத தளவாடங்களை தாக்க முடியாது. ஏனென்றால் இந்தியாவில் அப்படி கேம்ப் எதுவுமே இல்லை.
5. காஷ்மீரில் உள்ள ஒரு சில தீவிரவாத கேம்ப் கூட பாகிஸ்தானுக்கு ஆதரவானது.
6. இப்போது பாகிஸ்தான் நினைத்தால் கூட எங்கே தாக்குவது என்ற முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
7. ஏனென்றால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தளங்களில் மட்டுமே இந்தியா தாக்கியது.
8. இதற்கு பதிலடியாக இந்தியாவில் பாகிஸ்தான் எங்கே தாக்கினாலும் அது போர். பாகிஸ்தானுக்கு திருடனுக்கு தேள் கொட்டியது போன்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications