செந்தில் பாலாஜியிடமே கைதுக்கான காரணத்தை.. அமலாக்கத்துறை சொல்லவில்லை.. கஸ்டடி வழக்கில் பரபர வாதம்
சென்னை: கைதுக்கான காரணத்தை செந்தில் பாலாஜியிடமே தெரிவிக்கவில்லை என இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் வாதம் வைத்தார்.
செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி. மருத்துவமனையிலேயே நடந்த விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

17 மணி நேர ரெய்டை தொடர்ந்து நேற்று இரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரமாக முயன்று வந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது.
அதன்படி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியான அல்லி சற்று நேரத்திற்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அவரின் அறையிலேயே இந்த வழக்கு விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள், செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் இதையடுத்து செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் அறைக்கு சென்று வாதம் வாதம் வைத்தனர்.
சிகிச்சை அறையிலேயே நடந்த விசாரணையில், செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது. ஆனால் செந்தில் பாலாஜி சட்ட விதிகளுக்கு எதிராக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டாரா தெரியவில்லை. அதேபோல் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்றும் தெரியவில்லை என்று செந்தில் பாலாஜி வழக்கறிஞர் இளங்கோவன் வாதம் வைத்துள்ளார்.

வாதங்களை கேட்ட பின், செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி. மருத்துவமனையிலேயே நடந்த விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
பெயில் வழக்கு: இதையடுத்து பெயில் மற்றும் கஸ்டடியை நீக்குவது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் வாதம் வைத்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரிமாண்டை நிராகரிக்க வேண்டும்; இன்று அதிகாலை, மனித உரிமை மீறி அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர் . நேற்று காலை 7 மணி முதல் இன்று அதிகாலை வரை விசாரித்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக நள்ளிரவில் கைது செய்துள்ளனர். மனைவியிடம், உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியப்படுத்த வேண்டும் அதை செய்யவில்லை. அமலாக்கத்துறை விதி மீறல்கள் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி கைது செய்துள்ளனர்.
கைதுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்படவில்லை. கைதுக்கான காரணத்தை செந்தில் பாலாஜியிடமே தெரிவிக்கவில்லை. செந்தில் பாலாஜியிடமே ஏன் என்று சொல்லாமல் கைது செய்துள்ளனர். மனித உரிமையை மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர்., என்று வாதம் வைத்தார்.
இதையடுத்து அமலாக்கத்துறை வைத்த வாதத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கான மெமோவை வாங்க மறுத்தார்.ரிமாண்ட்டை நீக்க கோரிக்கை வைக்க முடியாது, ஜாமீன்தான் கேட்க முடியும்.
கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே மெமோவை வாங்க செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார் என்று அமலாக்கத்துறை வாதம் வைத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications