முதல்வரே வாய்ப்பு தர சொல்லியும் கூட.. சபாநாயகர் இப்படி செய்யலாமா.. கொந்தளித்த தமிமுன் அன்சாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டப் பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச வாய்ப்பு வழங்குமாறு பரிந்துரைத்த பின்னரும் எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச சபாநாயகர் அனுமதி மறுத்தது ஏற்கத்தக்கதல்ல என்றும், ஜனநாயகத்தில் காரசாரமான விவாதங்கள் இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பு மறுப்பது முறையல்ல என்றும் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலமைச்சரே பரிந்துரைத்தும் கூட வானளாவிய அதிகாரம் தன்னிடம் இருக்கிறது என்பதற்காக சபாநாயகர் எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பளிக்காமல் மறுக்கலாமா. இந்த சபாநாயகரைத் தான் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் பாராட்டினார்கள். முதலமைச்சர் பரிந்துரைத்த பின்னரும் கூட சபாநாயகர் நடந்து கொண்டது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

Thamimun Ansari

முன்னாள் முதலமைச்சர்களைப் பற்றி எல்லாம் குற்றச்சாட்டுகள் எழுப்புகின்றபோது, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் நியாயமாக எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். அவர்கள் எப்படி அமைதியாக இருப்பார்கள். அதே நேரத்தில் எதிர்க்கட்சியினர் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துகிற நேரத்தில் மீண்டும் சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, இந்த கருத்து சம்பந்தபமாக பேசுவதற்கு ஒரு வாய்ப்பை கேட்டார்.

திமுகவினருக்கு வாய்ப்பு மறுப்பு

சட்டசபை என்பது ஜனநாயகம். கடந்த வியாழக்கிழமை கூட பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது சட்டசபையில் ஆரோக்கியமான சண்டைகள் இருக்கத்தான் செய்யும் என்று சொன்னார். அந்த அடிப்படையில் தான், முதல்வர் விஜய் பேசி அமர்ந்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் வாய்ப்பு கேட்டார். வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து தான் திமுகவினர் தங்கள் ஆட்சேபனையை வெளிப்படுத்தினர். ஜனநாயகத்தில் இதுவும் ஒரு அம்சம்.

திமுகவினர் வன்முறை, அரஜாகத்தில் ஈடுபட்டார்களா. தர்ணா என்பது பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இயல்பாக நடக்கக் கூடியது. ஒருகட்டத்தில் முதலமைச்சரே தலையிட்டு எதிர்க்கட்சியினருக்கு பதில் சொல்லக்கூடிய வாய்ப்பைத் தாருங்கள் என்று பரிந்துரைக்கிறார். உடனடியாக சபாநாயகர் கோபப்பட்டு, நான் தான் முடிவு செய்வேன். உங்களுக்கு அனுமதியில்லை என்று கூறியதை அடுத்தே திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

சபாநாயகர் செயல் ஏற்கத்தக்கதல்ல

முதலமைச்சர் வாய்ப்பளிக்க கூறிய பின்னரும் எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு மறுப்பது நியாயமில்லை என்று சபாநாயகரிடம் கூறினேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அதன் பிறகு அவை முன்னவரிடமும் பரிந்துரைக்க கூறினேன். ஜனநாயகத்தில் காரசாரமான விவாதம் இருக்கலாம், ஆனால் வரம்பு மீறாமல் இருக்க வேண்டும் அவ்வளவுதான். திமுகவினர் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.

முதல்வருடைய உரையை எதிர்த்து திமுகவினர் வெளிநடப்பு செய்யவில்லை. முதலமைச்சரின் கருத்துக்கு மாற்று கருத்து கூற வேண்டும் என்றே பேச வாய்ப்பு கேட்டனர். ஆனால், முதலமைச்சரே வாய்ப்பை பரிந்துரை செய்த பின்னரும் சபாநாயகர் வாய்ப்பளிக்காததாலேயே திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சபாநாயகரின் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. சபாநாயகருக்கு இவ்வளவு கோபப்படவோ, கடுமை காட்டக் கூடாது. இது நல்லதல்ல. அதனால், மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+