தொடர் மழை.. ஏரி, குளம் நிரம்புகிறதே தவிர சாலையில் ஒரு சொட்டு நீர் தேங்குவதில்லை.. மா.சுப்பிரமணியன்
சென்னை: மருத்துவத் துறை, உள்ளாட்சித் துறை இணைந்து தேங்கி உள்ள தண்ணீரை அகற்றி டெங்கு பரவலை தடுக்க வேண்டும் என்கிறார் எடப்பாடி. திமுக ஆட்சி அமைந்த பிறகு சென்னை மாநகராட்சியில் மட்டும் ரூ.2,899.09 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- டெங்கு போன்ற விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு மக்கள் படையெடுக்கின்றார்கள். எனவே ஜெயலலிதா ஆட்சியில் நடத்தியதை போல மருத்துவ முகாம் கள் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

மருத்துவத்துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில் கடந்த அக்டோபர் 29-ந் தேதி தொடங்கி இந்த ஆண்டு இறுதிவரை மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் 10 அறிவிக்கப்பட்டு வாரத்திற்கு 1,000 முகாம்கள் என்று இலக்கு அறிவிக்கப்பட்ட தில், இலக்கை மிஞ்சிய சாதனையாக இதுவரை நடைபெற்ற 5 வார மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களில் 5,000 முகாம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் 10,576 முகாம்கள் நடைபெற்று உள்ளது. அதில் 5,21,853 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்.
இது தெரியாமல், புரியாமல் யாரோ எழுதிக்கொடுத்ததை வரு கிற நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மருத்துவத்துறையில் அரசியல் செய்ய பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதில் என்ன வேடிக்கை என்றால் ஜெயலலிதா ஆட்சியில் 2012-ம் ஆண்டு உச்சக்கட்ட டெங்கு பாதிப்பு 13,204 பேர் பாதிக்கப்பட்டு 66 பேர் உயிரிழந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அதிகமாக டெங்கு பாதிப்பு2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் பாதிப்புகள் 23,294 பாதிக்கப்பட்டு 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 3,57,612 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 7,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 537 பேர், 10 பேர் இறந்துள்ளனர். மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை இணைந்து தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி டெங்கு பரவலை தடுக்க வேண்டும் என்கிறார் எடப்பாடி பழனிசாமி.
2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு பெருநகர சென்னை மாநகராட்சியில் மட்டும் 862.56 கி.மீக்கு, 2,899.09 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 369.60 கி.மீ நீளத்திற்கு ரூ.1,894.59 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர் மழை பெய்து ஏரி, குளம் நிரம்புகிறதே தவிர சாலையில் ஒரு சொட்டு நீர் தேங்குவதில்லை.
இதை அறியாமல் எடப்பாடி ஒரு பொய்யை உணர் வுபூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் ஏமாற்றுப்பேர்வழிகளின் தந்தை கோயபல்ஸ் போல் காட் சித்தருகிறார். அவர் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஓட்டு அரசியலுக்காக பல லட்சம் ஏழை, எளிய மக்கள் பயன் படுத்தும் ஆஸ்பத்திரிகள் மீதும், சேவைபுரியும் மருத்துவத் துறை மீதும் காழ்ப்புணர்ச்சி அரசியலை இனிவரும் காலங் களில் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications