ID கார்டு காட்டினாலும் எம்எல்ஏனு நம்ப மாட்றாங்க. - தவெக எம்எல்ஏவால் சிரிப்பலை.. யார் இந்த சபரி ஐயங்கரன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''ஆட்டோவில் சட்டசபை உள்ளே வரும்போதெல்லாம்.. நீங்கள் யார் யார் என்று காவலர்கள் கேட்பார்கள். எம்எல்ஏ என்று சொல்லி ஐடி கார்டு எடுத்து கொடுப்பேன். நம்பமாட்டாங்க. கல்லூரி படிக்கும்போது காதல் தோல்வி. வேலையும் இல்லை.. காரும் இல்லை.. ஆனால் இன்று தலைவர் (முதல்வர் விஜய்) வேலையும் தந்துள்ளார். காரும் தந்துள்ளார். அவருக்கு ரொம்ப ரொம்ப நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்று பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐயங்கரன் பேசியது சபையில் சிரிப்பலையை ஏற்படுத்திய நிலையில் அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழக சட்டசபையில் தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்கி நடந்து வருகின்றன.இன்று நீர்வளம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.

even-when-i-show-my-id-card-they-dont-believe-im-an-mla-says-tvk-mla-sabari-iynkaran

இந்த விவாதத்தின் மீது பல்வேறு எம்எல்ஏக்கள் பேசினர். இன்றைய சட்டசபை நிகழ்வில் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ சபரி ஐயங்கரன் எழுந்து பேசினார். அப்போது அவரது பேச்சு அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

குறிப்பாக முதல்வர் விஜய் யாருடா அது? என்பது போல் தனது இருக்கையில் இருந்து திரும்பி பார்த்து சிரித்தார். இதற்கு முக்கிய காரணம் சபரி ஐயங்கரன் சொன்ன வார்த்தைகள் தான். சபரி ஐயங்கரன் பேசும்போது, ''புதிதாக சட்டமன்றத்துக்கு வந்துள்ள எம்எல்ஏக்களுக்கு கார்டு தந்துள்ள முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒரேயொரு விஷயம் வேடிக்கையாக சொல்கிறேன். கல்லூரி படிக்கும்போது காதல் தோல்வி.. வேலையும் இல்லை.. காரும் இல்லை. ஆனால் இன்று தலைவர் வேலையும் தந்துள்ளார். காரும் தந்துள்ளார். அவருக்கு ரொம்ப ரொம்ப நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

இந்த சமயத்தில் விஜய் பேசுவது யார்? என்று திரும்பி பார்த்து சிரித்தார். விஜய் பார்த்ததும் அவரை கும்பிடுவது போல் சைகை காட்டிய சபரி ஐயங்கரன் தொடர்ந்து பேசினார். அப்போது, ''ஏனென்றால் நான் டிரெயினில் தான் வருகிறேன். ஆட்டோவில் உள்ளே வரும்போதெல்லாம்.. நீங்கள் யார் யார் என்று காவலர்கள் கேட்பார்கள். எம்எல்ஏ என்று சொல்லி ஐடி கார்டு எடுத்து கொடுப்பேன். நம்பமாட்டாங்க. ஆனால் 2 விஷயங்கள் மகிழ்ச்சியை தருகிறது. இன்று மக்களின் பசியை போக்கும் விவசயிகளும் சந்தோஷமாக இருக்கா்க. மக்கள் பணியாற்றும் நாங்களும் சந்தோஷமாக இருக்கிறோம். எல்லோர் தரப்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

இப்படி பேசி உள்ள சபரி ஐயங்கரன் எம்எஸ்சி இயற்பியல் மற்றும் பிஎட் படிப்பை முடித்தவர். மொத்தம் 72 லட்சம் சொத்து இருப்பதாக தனது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். தனது தேர்தல் பிரசாரத்தின்போது மதுபாட்டில்களில் விஜய் மற்றும் அவரது போட்டோவை வைத்து பிரசாரம் செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது விவாதத்தை கிளப்பியது.

இவர் பெரியகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு சர்ப்ரைஸாக வெற்றி பெற்றார். இதற்கு முக்கிய காரணம் திமுக, அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் தான். அதாவது பெரியகுளம் சட்டசபை தொகுதி தனி தொகுதியாகும். ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர் மட்டுமே போட்டியிட முடியும். திமுக 2 முறை வெற்றி பெற்றது. கடந்த 2019 இடைத்தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் ஆகியவற்றில் திமுகவின் சரவணகுமார் வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. திமுக கூட்டணியில் விசிகவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. விசிகவில் சக்திவேல் என்பவர் போட்டியிட்டார். இதனால் திமுகவினர் அதிருப்தியாகினர்.

அதேபோல் அதிமுகவில் இந்த தொகுதி அமமுகவிற்கு வழங்கப்பட்டது. அமமுகவின் கதிர்காமு போட்டியிட்டார். இதனால் அதிமுகவினரும் அதிருப்தியாகினர். அதிமுக, திமுக என்ற இரு பிரதான கட்சிகள் போட்டியிடாததால் சபரி ஐயங்கரன் எளிதில் வெற்றி பெற்றார். சபரி ஐயங்கரன் மொத்தம் 85,656 ஓட்டுகள் வாங்கியிருந்தார். விசிகவின் சக்திவேல் 66,335 வாக்குகள் பெற்றார். அமமுகவின் கதிர் காமு 44,521 வாக்குகள் பெற்றனர். இதனால் சபரி ஐயங்கரன் 19,321 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+