எல்ஜி - ‘எவரெஸ்ட்' பெருங்காய தூள் விற்க தடை! இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் மற்றும் லால்ஜி கோதூ நிறுவனங்கள்(எல்ஜி) சார்பில் தயாரிக்க்ப்படும் பெருங்காயம் தூள் தரம் குறைவாக இருப்பதாக கூறி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ''முன்னணி நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பெருங்காயம் பொடிகள் தரமின்றி இருப்பதாக நுகர்வோரிடம் இருந்து புகார்கள் வந்தது. இதையடுத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

everest-and-laljee-godhoo-hing-temporarilly-banned-by-fssai

தற்போதைய விதிகளின்படி பெருங்காய பவுடரில் 5 சதவீதம் ஆல்கஹாலில் கரையக்கூடிய சாறு இருக்க வேண்டும். ஆனால்'எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' எனும் நிறுவன பெருங்காயத்தில் 0-3 சதவீதம் மட்டுமே இது இருந்தது. இதனால் தரம் குறைந்து இருந்தது கண்டறியப்பட்டது. அதாவது பெருங்காயம் தூள் தயாரிப்பதில் 30 முதல் 40 சதவீதம் வரை பெருங்காயம் குறைவாக பயன்படுத்துவது உறுதியானது.

அதேபோல் 'லால் கோதூ' (எல்ஜி) நிறுவனத்திடம் இரந்து 6 வகையான பெருங்காயங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்டது. அப்போது அதில் 15 முதல் 32 சதவீதம் வரை ஸ்டார்ச் சேர்த்து இருப்பது தெரியவந்தது. இது அதிகபட்ச அளவான 1 சதவீதத்தை விட மிக அதிகம். இதனால் இந்த நிறுவனங்களில் பெருங்காயம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் பெருங்காயம் தயாரிக்கும் வகை இந்த தடை உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தரம் குறைவு தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட தரம் குறைவாக எப்படி பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்பது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது விற்பனைக்காக வழங்கப்பட்ட தரம் குறைந்த பெருங்காயத்தை திரும்ப பெறவும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் நிறுவனத்தின் முட்டை கறி, சிக்கன் மசாலா, கரம் மசாலா உள்ளிட்டவற்றிலும் விதிமீறல்கள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் அதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+