நோட் பண்ணீங்களா.. பாஜகவை விட்டு போகும் எல்லோரும் சொல்லும் "ஒரே" விஷயம்.. பாயிண்டை பிடித்த "புள்ளி"
அமர் பிரசாத் என்ன அன்னை தெரசாவா அவர் எப்படி அதிமுக பற்றி பேசலாம் என்று அக்னீஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: அதிமுகவை விமர்சனம் செய்ய அமர் பிரசாத் ரெட்டி, அண்ணாமலை யார் என்று, அதிமுகவில் நடக்கும் உட்கட்சி விஷயங்கள் பற்றி பேச இவர்கள் யார் என்று அரசியல் விமர்சகர் அக்னீஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அதோடு எடப்பாடி பழனிசாமியை.. எடப்பாடியார் என்று வாழ்த்தி.. அண்ணாமலையை கடுமையாக தாக்கி உள்ளார்.மேலும் தனக்கு நெருக்கமான பல நிர்வாகிகளை அதிமுக நோக்கி அவர் இழுத்து வருகிறார்.நேற்று அண்ணாமலையை விமர்சனம் செய்த திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளார்.
அதிமுகவில் இப்படி பாஜகவினர் பலர் இணைவதை விமர்சனம் செய்த அண்ணாமலை, கருணாநிதி, ஜெயலலிதா போல நான் முடிவு எடுப்பேன். அவர்களை போல நானும் தலைவன்தான். அவர்கள் எடுத்த முடிவை எதிர்த்து பலர் கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். அவர்களை போல நானும் தலைவன்தான். தேசிய கட்சி என்றாலே பெரிய கட்சி இல்லை, தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை இருந்தது. நாம் திராவிட கட்சிகளை சார்ந்து இருந்த நிலை இருந்தது. அது தற்போது மாறிவிட்டது. அண்ணாமலை இங்கே தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. நான் எல்லோரையும் தாஜா பண்ணிக்கொண்டு இருக்க மாட்டேன்.

நான் தலைவன்
நான் தலைவன். பாஜகவினரை இழுத்தால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன. திராவிட கட்சிகள் இப்போது யாரை நம்பி இருக்கிறார்கள். எங்களின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் அங்கே சென்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களை திராவிட கட்சிகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன. எங்களின் வயசு என்ன? அவர்களின் வயசு என்ன? எங்களை நம்பி அவர்கள் இருக்கிறார்கள்.. நாங்கள் எத்தனை முறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். அவர்கள் எத்தனை முறை இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாங்கள் வளர்ந்து இருக்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும், கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அப்படித்தான் புதிய தலைவர்களுக்கு பதவி அளிக்க முடியும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுக பாஜக இடையே நடக்கும் மோதல் குறித்து அரசியல் விமர்சகர் அக்னீஸ்வரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் அளித்துள்ள பேட்டியில், நிர்மல் குமார் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்துள்ளார். அவரை தொடர்ந்து திலீப் கண்ணன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இணைந்துள்ளனர். இவர்கள் எல்லாம் பாஜகவில் இருந்தே வந்தவர்கள் இல்லை. அவர்கள் வேறு கட்சியில் இருந்து பாஜக போய் இப்போது மீண்டும் கட்சி மாறி உள்ளனர். இதை எல்லாம் ஏன் இவ்வளவு தவறாக பேசுகிறார்கள். பாஜகவில் இப்போது இருக்கும் பலர் இதற்கு முன் வேறு கட்சியில் இருந்தவர்கள் தானே. திமுக, அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் பாஜகவிற்கு செல்லவில்லையா ? ஏன் கட்சி மாறும் நிர்வாகிகளை அண்ணாமலை இப்படி விமர்சனம் செய்கிறார். நிர்வாகிகள் கட்சி மாறுவதில் என்ன தவறு.,

குழப்பம்
இதை கூட்டணியில் குழப்பம் என்று சிலர் சொல்கிறார்கள். கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்பதை எடப்பாடி முடிவு செய்வார். கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்வார். கராத்தே தியாகராஜன் அதிமுகவில் இருந்து தானே பாஜக போனார். அப்போது இவர்கள் என்ன செய்தனர். கூட்டணியில் இருக்கும் தலைவர்களை எல்லாம் தெரிந்தே எல்லாம் எடப்பாடி தூக்கவில்லை. சின்ன பிரச்னையை இவர்கள் பெரிதாக்குகிறார்கள். பாஜக இதில் எல்லாம் வெற்றியடைய மாட்டார்கள். தமிழ்நாடு மக்களின் மனநிலை என்ன, அவர்களின் திட்டம் என்ன என்பதை பற்றி எல்லாம் பாஜகவினர் கவலைப்படவே மாட்டார்கள்.

ஈரோடு
பாஜக பெரிய கட்சி என்று அண்ணாமலை சொல்கிறார். அவர் ஏன் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் பின்னர் வேட்பாளரை களமிறக்கவில்லை. பெரிய கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அவர் ஏன் ஈரோடு கிழக்கு தேர்தலில் நிற்கவில்லை. எதிர்வினையை பார்க்க வேண்டி இருக்கும் என்று அண்ணாமலை மிரட்டுகிறார். அது என்ன எதிர்வினை. சொல்லுங்கள். மிரட்டுவார்களா? இன்னும் எத்தனை காலத்திற்கு எத்தனை பேரை இவர்கள் மிரட்டுவார்கள். எடப்பாடி அதை எல்லாம் தாண்டி போய்விட்டார். அண்ணாமலை எல்லாம் இதை பற்றி பேசலாமா?

அமர் பிரசாத்
அமர் பிரசாத் என்ன அன்னை தெரசாவா? அவரும் அரசியல் கட்சியில் தானே இருக்கிறார்? அவர் எப்படி அதிமுகவை விமர்சனம் செய்யலாம். அவர் யார் அதிமுகவை விமர்சனம் செய்வதற்கு. அவர் ஏன் அதிமுக விவகாரத்தில் மூக்கை நுழைகிறார். அதிமுகவில் நடப்பதை பற்றி அமர் பிரசாத் ரெட்டியும், அண்ணாமலையும் ஏன் கவலை படுகிறார்கள், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் ஏன் இவர்கள் தலையிடுகிறார்கள். பாஜகவில் இருந்து வெளியேறிய எல்லோரும் அண்ணாமலை மீதுதான் குற்றச்சாட்டு வைத்துள்ளனர் என்பதை மறக்க வேண்டாம், அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்., என்பதை மறக்க வேண்டாம், என்று அக்னீஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications