பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. குட்டீஸ்க்கு ஸ்நாக்ஸ்களை TredyFoodsல் ஆர்டர் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறந்து விட்டன. பள்ளிக்கு கொண்டு செல்ல குட்டீஸ்களுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸ்சில் கொடுக்கும் பலகாரங்கள் சத்தானதாக இருக்கவேண்டும். உங்களுக்காகவே பிரத்யேகமாக பாரம்பரியம் மிக்க பலகாரங்களை www.tredyfoods.com இணையதளத்தில் விற்பனை செய்கின்றனர்.

பண்டிகை என்றாலே முன்பெல்லாம் அம்மாவும் பாட்டியும் அடுப்படியில் நின்று சுடச்சுட பலகாரங்களை சுட்டுப்போட குட்டீஸ்கள் அதை ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் இன்றைக்கு அம்மாவும் பாட்டியும் கூட ரிட்டயர் ஆகும் வரை வேலைக்கு செல்வதனால் பலாகாரம் சுட நேரம் இருப்பதில்லை. கடைகளில் விற்கும் பலகாரங்களை சாப்பிட்டு பசியாறுகின்றனர் இன்றைய குட்டீஸ்கள். இளைய தலைமுறையினருக்கு பாரம்பரியம் மிக்க முறுக்கு, அதிரசம், சேவு, மிக்சர், கடலைமிட்டாய் போன்றவை கிடைக்காமலேயே போய்விடுமே என்ற ஏக்கம் சில ஆண்டுகளாகவே இருந்தது. அந்த ஏக்கத்தைப் போக்கவே துவங்கப்பட்டதுதான் www.tredyfoods.com இணையதளம். ஒவ்வொரு ஊரில் இருந்தும் பிரத்யேகமாக தருவிக்கப்படும் பாரம்பரிய பலாகாரங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர் மனதிற்கு பிடித்த பலகாரங்களை ஆர்டர் செய்து ருசித்து மகிழலாம்.

மண் மணம் பேசும் பலகாரங்கள்:

ஊருக்கு என்று சில பெருமை இருக்கிறது. அந்த ஊர் பலகாரங்களுக்கு என்று தனி சுவை இருக்கிறது. காரணம் அந்த ஊரில் விளையும் பொருட்களின் தன்மை, நீரின் சுவைதான். சாத்தூர்னா காரா சேவு, திருநெல்வேலின்னா நெய் அல்வா, கோவில்பட்டின்னா கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர்னா பால்கோவா என்று பாரம்பரியமாகவே பலகாரங்கள் ஊர் பெயர்களோடு தாங்கி நிற்கின்றன. இன்றைக்கும் பாரம்பரிய பலகாரங்களை தேடித் தேடி வாங்கி சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்காகவே www.tredyfoods.com இணையதளத்தில் பாரம்பரிய பலகாரங்களை விற்பனை செய்கின்றனர்.

குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ்:

நம் பிள்ளைகளுக்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி சாப்பிடக்கொடுத்தால் தேவையற்ற சத்துக்கள் கிடைப்பதில்லை. அம்மாவும் பாட்டியும் சாப்பிட்ட சத்தான பலகாரங்களை நம் வளரும் தலைமுறையினருக்குக் கொடுக்கலாம். நிலக்கடலை இனிப்பு உருண்டை, பாதம் பருப்பு உருண்டை,கருப்பு எள் உருண்டை, முந்திரி பருப்பு உருண்டை,நெய் ரவா உருண்டை,பாசிப்பயறு உருண்டை, பாசிப்பருப்பு உருண்டை என பலவகையாக ஹோம் மேட் இனிப்பு உருண்டைகள் www.tredyfoods.com மில் விற்பனை செய்யப்படுகின்றன. பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு நாம் கொடுத்து அனுப்பும் ஸ்நாக்ஸ் பாக்சில் ஹோம்மேட் இனிப்பு உருண்டைகளை தினசரியும் ஒன்று அல்லது இரண்டு கொடுத்து அனுப்புவதன் மூலம் வளரும் தலைமுறையினரின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

காரமும் இனிப்பும் கலந்த வாழ்க்கை:

நம் வாழ்க்கை காரமும் இனிப்பும் கலந்ததுதான். நாம் சாப்பிடும் ஸ்நாக்ஸ்களும் அப்படித்தான். காபி குடிக்கும் நேரத்தில் கை நிறைய காரா சேவு சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஒரு முறுக்கை எடுத்து நறுக்கென்று கடிக்க பற்கள் ஏங்கும். வெளியூர்களில் படிக்கவும், வேலைக்காகவும் சென்றிருப்பவர்களுக்கு பாரம்பரிய பலகாரங்களைச் சாப்பிட வேண்டும் என்று ஆசை ஏற்படும் போது ஆன்லைனில் www.tredyfoods.com ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அம்மாவின் கைப்பக்குவத்தில் செய்த மணப்பாறை முருக்கும் அதிரசமும் சுவை மாறாமல் உங்கள் இருப்பிடத்தை வந்தடையும்.

சுவையான காபி பவுடர்கள்:

பலகாரங்கள் மட்டுமல்ல பில்டர் காபி பொடியும் விற்பனை செய்யப்படுகின்றன. கூர்க், ஏற்காடு பகுதிகளில் விளையும் காபிக்கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட காபி பவுடர்களும் விற்பனை செய்யப்படுகின்றன. காபி பிரியர்கள் ஆர்டர் செய்து பருகி மகிழலாம். இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் எந்த பொருட்களை ஆர்டர் செய்தாலும் அவை பாதுகாப்பாக பத்திரமாக உங்கள் வீடு தேடி வரும். இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பொருட்களை ஆர்டர் செய்யலாம். Tredyfoods.com மில் ஒருமுறை ஆர்டர் செய்து சாப்பிட்டு பாருங்க... உங்களின் நாவின் சுவையரும்புகள் பாரம்பரிய பலகாரங்களுக்கு அடிமையாகிவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+