Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிய ஆபத்து காத்திருக்கு.. இந்தியாவின் EMI தலைமுறைக்கு.. ஜாம்பவான் வாரன் பஃபெட் கடும் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

அடுத்த சில நாட்களில் நாடு முழுக்க தீபாவளி விற்பனை தொடங்க உள்ளது. மீண்டும் பண்டிகைக் காலம் வந்துவிட்டது. புதிய ஐபோன்கள் சந்தைக்கு வந்துவிட்டன, ஏர்பாட்கள் கடைகளில் மின்னுகின்றன. EMI இல்லாத தவணைகள் மற்றும் பழைய போனை மாற்றிக் கொடுத்தால் கிடைக்கும் சலுகைகள் என விளம்பரங்கள் எங்கும் நிறைந்துள்ளன.

பல கடைகள் இரண்டு வருடத் தவணைத் திட்டங்களை முன்னணி போன்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளன. உதாரணமாக, ஐபோன் 17-ஐ 24 மாத EMI திட்டத்திலும் விற்பனை ஆகின்றன. ஆனால் இப்படி இஎம்ஐ மூலம் போன் மட்டுமன்றி எந்த விதமான பொருட்களையும் வாங்குவது தவறு என்று அமெரிக்க பங்குச்சந்தை ஜாம்பவான் வாரன் பஃபெட் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

warren buffett emi

கிரெடிட் கார்டுகளை நம்பியுள்ள - இந்தியர்கள்

இந்தியாவில் ஐபோன் வாங்குபவர்களில் கிட்டத்தட்ட 70% பேர் EMI மூலம் பணம் செலுத்துகிறார்கள். அண்மைய ஆய்வு ஒன்றின்படி, மாதம் ₹50,000-க்கும் குறைவாகச் சம்பாதிக்கும் இந்திய ஊழியர்களில் 93% பேர் தங்களின் அன்றாடச் செலவுகளுக்குக் கிரெடிட் கார்டுகளை நம்பியுள்ளனர். EMI-கள் இன்று ஆடம்பரமான விஷயம் இல்லை, வாழ்வாதாரமாகிவிட்டன.

பண்டிகைக் காலங்களில், புதிய கேட்ஜெட்களின் மோகத்தில், மாதத் தவணைகளில் பணம் செலுத்துவது எளிதானதாகத் தோன்றும். ஆனால் பல EMI-கள் குவியும்போது, கிரெடிட் கார்டுகளுக்கு அதிக வட்டி செலுத்த நேரும்போது, வெறும் வெளித்தோற்றத்திற்காகக் கடன் வாங்கி வாழும்போது அது நம்முடைய இயல்பு வாழ்க்கையே பாதிக்கும், புரட்டி போடும் நிலை ஏற்படும்.

இஎம்ஐ வாரன் பஃபெட் விமர்சனம்

வாரன் பஃபெட் இந்தச் சூழலை கடுமையாக விமர்சனம் செய்கிறார், "இப்போது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதையும், நாளை உங்களுக்கு என்ன உதவும் என்பதையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

உங்கள் வரம்புக்குள் வாழுங்கள், வட்டி செலுத்த வேண்டியதில் இருந்து உங்கள் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதை விடச் சேமிப்பையே உங்கள் தேர்வுகளுக்கு வழிகாட்டியாகக் கொள்ளுங்கள்.

EMI-களின் உளவியல் ரீதியாக தந்திரமானது. ஒரு போனுக்கு இன்று ₹80,000 செலுத்தச் சொல்வதற்குப் பதிலாக, மாதம் ₹6,000 மட்டும் செலுத்துங்கள். இப்படிப் பிரித்துச் செலுத்தும்போது, அது வலி இல்லாததாகத் தோன்றுகிறது.

பண்டிகைக் காலங்களில், எல்லோரும் புதிய பொருட்களை வாங்கும் போது, நாமும் வாங்காமல் இருப்பது தவறு என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், இங்குள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவில் கிரெடிட் கார்டு வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 36-40% ஐத் தாண்டும். அதாவது, ₹50,000 கடன் இரண்டு வருடங்களில் செலுத்தாவிட்டால், அது இரட்டிப்பாகலாம். 'இப்போது வாங்கு, பிறகு செலுத்து' திட்டங்கள் ஆபத்தில்லாதவை என்று பலர் நினைத்தாலும், நான்கில் ஒரு பயனர் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது.

வீடுகளுக்கும் கார்களுக்கும் பயன்படுத்தப்பட்ட EMI-கள் இப்போது போன்கள், உடைகள், ஏன் சுற்றுலா போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே ஒரு EMI உங்களை பாதிக்காது. ஆனால் நிறைய EMIக்கள் வந்தால் அது பெரிய சிக்கலாகும்.

EMI - மொத்தக் கட்டமைப்பும் சரிந்துவிடும்

மூன்று EMI-கள், இரண்டு கிரெடிட் கார்டு பாக்கிகள் எனச் சேர்ந்து, சம்பளம் வருவதற்கு முன்பே உங்கள் மாத வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி செலவாகிவிடுகிறது. ஒரு அவசரநிலை அல்லது வேலையிழப்பு ஏற்பட்டால், இந்த மொத்தக் கட்டமைப்பும் சரிந்துவிடும்.

நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகமாகச் செலவழிப்பதன் மூலம் பணக்காரர் ஆக முடியாது கடன் என்பது ஒரு நிதிப் பொறுப்பு மட்டுமல்ல, அது காலப்போக்கில் கனமாக மாறும் ஒரு மன ரீதியான சுமையாகும். இந்தியாவின் இன்றைய கடன் கலாச்சாரத்தில், இந்தச் சுமை வேகமாகப் பரவி வருகிறது.

முதலில், செலவழிப்பதற்கு முன் சேமியுங்கள்: மாத இறுதியில் சேமிப்புக்கு என்ன மிச்சம் இருக்கிறது என்று பார்க்கக் காத்திருக்க வேண்டாம். முதலில் நீங்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டு, மீதமுள்ள பணத்தில் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். சிறிய தொகையாக இருந்தாலும், எண்ணிக்கை முக்கியமல்ல, பழக்கம்தான் முக்கியம்.

இரண்டாவது, வசதிக்காக மட்டுமே கிரெடிட்டைப் பயன்படுத்துங்கள்: கிரெடிட் கார்டு என்பது கூடுதல் பணம் அல்ல என்பதை பஃபெட் நினைவூட்டுவார். பணம் செலுத்துவதை எளிதாக்கும் ஒரு கருவி மட்டுமே. உங்கள் பில் முழுவதையும் நீங்கள் செலுத்தவில்லை என்றால், நீங்கள் ஏற்கெனவே ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டீர்கள். இந்தியாவில், கார்டு வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 40% ஐ எட்டலாம். அது கடன் அல்ல; அது ஒரு வலை. சிக்க வேண்டாம்

மூன்றாவது, கூட்டு வட்டி உங்களுக்காக வேலை செய்யட்டும், உங்களுக்கு எதிராக அல்ல. ஒவ்வொரு மாதமும் சில ஆயிரம் ரூபாய்களை முதலீடு செய்தால், அது நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேகமாக வளரும். ஆனால் இதே கொள்கை கடனுக்கும் தலைகீழாகச் செயல்படும். EMI-களும் செலுத்தப்படாத கார்டு பில்களும் கூட்டு வட்டியுடன் பெருகி உங்களுக்கு எதிராகச் செயல்படும். ஒன்று உங்கள் சுதந்திரத்தை வளர்க்கும், மற்றொன்று அதை அழிக்கும்., எனவே கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+